இருப்பதிலேயே ரஜினிதான் பழைய முகம்: ரஞ்சித்துக்கு பிரபல நடிகர் விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,September 18 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த 'கபாலி' படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் ராதாரவி நடிப்பதாக இருந்தது. இதுகுறித்து கலைஞருக்கு வணக்கம் என்ற நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராதாரவி கூறியதாவது:

கலைப்புலி தாணு அவர்கள் 'கபாலி' படத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் நடிக்க வேண்டும் என்று எனக்கு போன் செய்து கேட்டார். ரஜினி படத்தில் ஒருநாள் மட்டுமா? இதுவரை நான் அப்படி நடித்ததில்லையே என்று யோசித்தேன்

பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் அதுகுறித்து நான் தாணுவிடம் கேட்டபோது, 'பழைய முகம் வேண்டாம் என இயக்குனர் கூறிவிட்டதாக கூறினார். அப்படி பார்த்தால் இருப்பதிலேயே ரஜினி முகம் தானே பழைய முகம்' என நான் தாணுவிடம் கூறினேன்' என்று ராதாரவி பேசினார். இதே விழாவில் இயக்குனர் ரஞ்சித்தும் கலந்து கொண்டு கலைஞர் குறித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இணையத்தில் லீக் ஆன 'விஸ்வாசம்': அதிர்ச்சியில் படக்குழு

தல அஜித் 'விஸ்வாசம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உதயநிதியின் 'கண்ணே கலைமானே' சென்சார் தகவல்

உதயநிதி நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய 'கண்ணே கலைமானே' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

ஐஸ்வர்யாவை டார்ச்சர் செய்யும் விஜி! வேடிக்கை பார்க்கும் யாஷிகா

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் அவர்களுடைய மன உறுதியை சோதனை செய்யும் டாஸ்க்காக அமைந்துள்ளது.

இரண்டாம் பாகமாக உருவாகும் பிரபுதேவாவின் சூப்பர் ஹிட் படம்

பிரபுதேவா, தமன்னா, சோனு சூட் நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கிய சூப்பர் ஹிட் த்ரில் படமான 'தேவி' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில்

செக்க சிவந்த வானம்: சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண்விஜய் என நான்கு ஹீரோக்கள் முக்கிய வேடத்தில் நடித்த 'செக்க சிவந்த வானம்'