5000 பேர்களுக்கு ஒளி கொடுத்தவர் அஜித்: ராதாரவி

  • IndiaGlitz, [Saturday,October 28 2017]

ஒருசில ஆயிரங்கள் தானதர்மம் செய்தாலே விளம்பரப்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் இந்த காலத்தில் யாருக்குமே தெரியாமல், எந்தவித விளம்பரமும் இல்லாமல் அஜித் செய்த உதவி குறித்து நடிகர் ராதாரவி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் மகன் விஜய்சங்கர் ஒரு கண் டாக்டர் என்பது பலருக்கு தெரிந்திருக்கும். திரையுலகில் உள்ள பலர் இவரிடம் தான் காண்ட்ராக்ட் உள்ளிட்ட கண் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இவரை ஒருமுறை நடிகர் ராதாரவி சந்தித்து பேசியபோது, 'அஜித் அடிக்கடி தனது மருத்துவமனைக்கு வருவது குறித்து விஜய் சங்கர் கூறினாராம்.

அஜித் எதற்கு கண் மருத்துவமனைக்கு அடிக்கடி வருகிறார் என்று ராதாரவி கேட்டதற்கு 'கண் சிகிச்சை செய்பவர்களுக்கு பண உதவி செய்ய வருவார் என்றும் இதுவரை சுமார் 5000 பேர்களின் அறுவை சிகிச்சைகளுக்கு அவர் பணம் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால் இதுகுறித்து அவர் யாரிடமும் இந்த உதவி குறித்து கூறியதில்லை என்றும் எந்தவித விளம்பரமும் இல்லாமல் 5000 பேர்களின் கண்களுக்கு ஒளி கொடுத்தவர் அஜித் என்றும் ராதாரவி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அஜித்தை தான் பார்த்து வெகுநாட்கள் ஆகிவிட்டாலும் அவரை பற்றி கேள்விப்படும்போது தனக்கு பெருமையாக இருப்பதாகவும், குமணன், கர்ணன் போன்ற வள்ளல்களுக்கு இணையானவர் அஜித் என்றும் ராதாரவி கூறினார்.

More News

சிவாஜி பேரனுடன் இணையும் சூப்பர் ஹிட் வெற்றி கூட்டணி

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் தயாரிப்பில் 'மீன் குழம்பும் மண்பானையும்' என்ற படம் கடந்த ஆண்டு வெளியானது

ரஜினியின் '2.0': எந்திர லோகத்து சுந்தரியே பாடல் விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான '2.0' படத்தின் இரண்டு பாடல்கள் நேற்று வெளியாகியுள்ளது.

ரஜினியின் '2.0': வேற லெவலில் 'ராஜாளி நீ காலி' பாடல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் இரண்டாம் பாடலான 'ராஜாளி' என்று தொடங்கும் பாடலை மதன்கார்க்கி எழுத இந்த பாடலை பிளாஸ், அர்ஜூன் சாண்டி மற்றும் சித்ஸ்ரீராம் பாடியுள்ளனர்.

டுவிட்டர் பிரபலத்திற்கு சமோசா அனுப்பி சமாதானம் செய்த பிரபல நிறுவனம்

சமூக வலைத்தளமான டுவிட்டரில் கப்பார்சிங் என்பவர் பிரபலம் என்பது டுவிட்டர் பயனாளிகள் பலருக்கு தெரிந்திருக்கும். இவருக்கு சமீபத்தில் தனியார் கேப் நிறுவனம் ஒன்று சமோசா அனுப்பி

தமிழக அரசுக்கு ஜி.வி.பிரகாஷ் நன்றி

ஹார்வர்டு பல்கலையில் தமிழ் மொழிக்கு இருக்கை கிடைப்பது தமிழக அரசின் முயற்சியால் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதை அடுத்து இந்த இருக்கைக்காக கடந்த சில மாதங்களாக முயற்சிகளில் ஈடுபடும் ஒருவராகிய ஜி.வி.பிரகாஷ்