கமல் கட்சியுடன் பாமக கூட்டணி வைத்திருக்கலாம்: பிரபல நடிகர் கிண்டல்
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி என்பது கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே எதிர்பார்த்தது தான். ஆனால் இந்த கூட்டணியில் பாமக இணைந்தது பலருக்கு பெரும் அதிர்ச்சி. 7+1 தொகுதிகளுக்காக பாமக தனது கொள்கையில் சமரசம் செய்து கொண்டதை பாமகவினர்களாலே இன்னும் ஜீரணிக்க முடியவில்லை
இந்த நிலையில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்தது குறித்து பிரபல நடிகர் ராதாரவி கூறியபோது, 'அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்துக்கொண்டதில் யாருக்கும் அதிர்ச்சியில்லை. மீதி நாட்களை அதிமுக ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள, மோடியின் தயவு அதிமுகவுக்கு தேவை என்பதால் கூட்டணி வைத்துள்ளனர்.
ஆனால், அதிமுகவுடனும் பாஜகவுடனும் பாமக கூட்டணிவைத்ததைத்தான் யாராலும் சகித்துக்கொள்ளமுடியவில்லை. ‘சொல்வது ஒன்று செய்வது ஒன்று’ என்ற வார்த்தை, ராமதாஸ் ஐயாவுக்கு சரியாகப் பொருந்தும். பாஜகவை கிழிகிழியென்று கிழித்துக்கொண்டே இருந்தார். அதேபோல், அதிமுக செய்த ஊழல்களையெல்லாம் பட்டியலிட்டு, புத்தகமே போட்டார். ஆளுநரிடம் சென்று புகார் கொடுத்தார். அப்பேர்ப்பட்ட ராமதாஸ் ஐயா, இப்படி அதிமுகவுடனும் பாஜகவுடனும் கூட்டு சேருவார் என்றதும், மக்களே ஒருமாதிரி திட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
அதிமுக கூட்டணிக்கு பதிலாக பாமக, கமல் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கலாம். பத்து தொகுதிக்கு மேலேயே ஒதுக்கித்தருவார் கமல். நல்லவேளை, ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்திருந்தால், இருக்கிற கோடிக்கணக்கான கட்சிகளுடன் அந்தக் கட்சியும் ஒன்றாகியிருக்கும். இவ்வாறு ராதாரவி கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout