காங்கிரஸ் பிரபலத்தை அடுத்து ரஜினியை சந்தித்த பாஜக பிரபலம்

  • IndiaGlitz, [Tuesday,March 10 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் நிலையில் அவரை தினந்தோறும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை செய்து வருகின்றனர்

ரஜினி கட்சி ஆரம்பிகும் தினத்தில் பல அரசியல்வாதிகள் அவரது கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் பிரமுகர் திருநாவுக்கரசர் தனது மகன் மற்றும் மருமகள், பேரன் ஆகியோர்களுடன் ரஜினியை சந்தித்தார் என்றும் தனது பேரனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறவே ரஜினியை சந்தித்ததாகவும் அவர் கூறினார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகர் திருநாவுக்கரசர் அவர்கள் ரஜினியை சந்தித்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த பிரபல நடிகர் ராதாரவியும் இன்று ரஜினியை தனது குடும்பத்துடன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது