பேயாகவும் நடிக்குறாங்க, சீதைவாகவும் நடிக்குறாங்க: நயன்தாரா குறித்து ராதாரவி

  • IndiaGlitz, [Sunday,March 24 2019]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கொலையுதிர்க்காலம்' படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா நேற்று நடைபெற்றபோது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய ராதாரவி, நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாரா ஒரு நல்ல நடிகை என்பது உண்மைதான். அவர் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் தாக்குப்பிடித்து இருப்பதே பெரிய விஷயம். அவரை பற்றி வராத செய்திகளே இல்லை. அத்தனையும் மீறி அவர் தொடர்ந்து வெற்றிகரமான நடிகையாக இருந்து வருகிறார்.

இந்த பக்கம் பேயாகவும் நடிக்கின்றார், அந்த பக்கம் சீதையாகவும் நடிக்கின்றார். முன்பெல்லாம் கடவுள் வேடத்தில் நடிப்பதற்கு கே.ஆர்.விஜயாவை மட்டுமே தேடுவார்கள். ஆனால் இன்றைக்கு யார் வேண்டுமானாலும் கடவுள் வேடத்தில் நடிக்கலாம் என்ற நிலை உள்ளது. பார்த்தவுடன் கும்பிடுபவது போல் உள்ளவர்களையும், பார்த்தவுடன் கூப்பிடுபவர்கள் போல் உள்ளவர்களும் கடவுள் வேடத்தில் நடிக்கின்றனர். ஏனென்றால் நீங்கள் அனைத்தையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டீர்கள்' என்று ராதாரவி பேசினார்.

ராதாவின் இந்தபேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பாடகி சின்மயி, 'ராதாவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

More News

லைக்ஸ், ஷேருக்கு பின்னால் ஏகப்பட்ட விஷயம் இருக்குது: 'கீ' இயக்குனர்

இன்றைய கணினி உலகில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாத நபரே இல்லை என்ற அளவுக்கு சமூக வலைத்தளங்கள் பரந்து விரிந்து உள்ளது. அரசியல்வாதிகள் ஓட்டு கேட்பது

விஜய் ஆண்டனி படத்தில் கஸ்தூரியின் புதிய அவதாரம்

விஜய் ஆண்டனி நடிப்பில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தமிழரசன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் அடி எப்போதும் இந்த பேட்டையோட அடிதான்: வெற்றிக்கு பின் சிஎஸ்கே வீரர்கள் டுவீட்

இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் நேற்று ஆரம்பித்த நிலையில் முதல் போட்டியில் எதிர்பார்த்தபடியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியை பார்க்க  வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி!

ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பித்த நிலையில் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வருகிறது.

இரண்டு வாரிசுகள் மோதும் தென்சென்னை! வெற்றி யாருக்கு?

வாரிசு அரசியல் செய்வதாக ஒரு அரசியல் கட்சி இன்னொரு அரசியல் கட்சியை குற்றஞ்சாட்டியபோதிலும், ஒவ்வொரு கட்சியும் தேர்தல் சமயத்தில் தங்களுடைய வாரிசுகளைத்தான் களமிறக்கியுள்ளது.