'தல'க்கு மட்டும்தான் தனி மரியாதை : ராதாரவி
Wednesday, February 24, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
'தல' என்று அவரது ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அஜித், பல வெற்றி படங்கள் கொடுக்கும் நடிகர் என்பதை காட்டிலும் மனித நேயமுள்ள ஒரு மனிதர் என்பதே அவருடைய உண்மையான அடையாளம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நடிகர், பைக் ரைடர், கார் ரேஸ் பிரியர், சமையல் வல்லுனர், போட்டோகிராபர் என்பதையும் தாண்டி அவரது சேவை மனப்பான்மையே அவருக்கு பெரும் புகழை பெற்று தந்துள்ளது
இந்நிலையில் பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகரும், நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளருமான ராதாரவி, சமீபத்தில் அஜீத் குறித்து கருத்து கூறியபோது, 'நான் எல்லா நடிகரையும் பெயர் சொல்லித்தான் கூப்பிடுவேன். ஆனால் அஜித்தை மட்டும் சார்' என்று கூப்பிடுவேன். அவருக்கு நான் தரும் இந்த மரியாதை அவருடைய சேவை மனப்பான்மைக்கு' என்று கூறியுள்ளார்.
அஜித் குறித்து ராதாரவி கூறிய இந்த கருத்து சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments