close
Choose your channels

பாலாவின் 'வர்மா' படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

Tuesday, July 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் சீயான் விக்ரம் மகன் துருவ் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் துருவ்க்கு ஜோடியாக மேகா செளத்ரி என்ற கொல்கத்தாவை சேர்ந்த நடிகை நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் முடிவடைந்து தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு ரதன் என்பவர் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர்தான் 'அர்ஜூன் ரெட்டி' படத்திற்கும் இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

துருவ், மேகா செளத்ரி, 'காலா' புகழ் ஈஸ்வரிராவ், 'பிக்பாஸ் புகழ்' ரைசா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஈ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment