திமுகவில் இருந்து என்னை நீக்கிய காரணமே வேற: ராதாரவி
Send us your feedback to audioarticles@vaarta.com
'கொலையுதிர்க்காலம்' படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ராதாரவி மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அவர் திமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். கட்சியில் இருந்து தன்னை நீக்கியது குறித்து நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறிய நடிகர் ராதாரவி, 'நயன்தாரா குறித்து பேசியதற்காக என்னை கட்சியில் இருந்து நீக்கவில்லை என்றும், என்னை நீக்கியதன் காரணமே வேறு என்றும் குறிப்பிட்டார்.
தேர்தல் நேரத்தில் நான் பேசியது பெரிதுபடுத்தப்பட்டதால் பெண்களின் ஓட்டு பாதிக்கப்படும் என்று என்னை நீக்கியிருக்கலாம், அல்லது திமுகவில் உள்ள ஒருசிலர் என்னை நீக்கும்படி நிர்ப்பந்தம் செய்திருக்கலாம் என்று கூறிய ராதாரவி, என்னை ஒருசில கட்சிகள் தங்கள் கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்திருப்பதாகவும், நான் பேசியது தவறாக இருந்திருந்தால் அழைத்திருக்குமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் என்னை கட்சியில் இருந்து நீக்கும் முடிவை திமுக தலைவர் ஸ்டாலின் தன்னிச்சையாக எடுத்திருக்க வாய்ப்பு இல்லை என்றும், நிர்ப்பந்தம் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தான் நம்புவதாக தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout