எனது தந்தையை பார்த்து நடிக்க வரவில்லை - ராதாரவி

  • IndiaGlitz, [Wednesday,May 29 2024]

நடிகர் ராதாரவி இண்டியா கிளிட்ஸ்க்கு அளித்த பேட்டியில் நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நடிப்பாசை எனக்கு வந்துவிட்டது. எனது தந்தையை பார்த்து வரவில்லை, நடிப்பு மீது பற்று ஏற்பட்டது என்றால் அதற்கு காரணம் சிவாஜி அப்பா தான். எங்க அம்மா எங்க அப்பாவிடம் என்னை நெருங்க விட மாட்டார்கள், நான் என் தந்தையுடன் நடித்திருக்கிறேன்.

சில சமயம் எனது தந்தை உனது கல்லூரி மாணவர்களை அழைத்து வா என்று சொல்வார், அப்படி அழைத்து வந்து அவருடன் நடித்திருக்கிறேன். ஆனால் நான் நடித்த படத்தை அவர் பார்க்கவே இல்லை நான் லா காலேஜ் முடித்துவிட்டு சின்னஞ்சிறு கிளியே படத்தின் மூலம் திரையில் அறிமுகமானேன். எனது தந்தை பார்த்த சிலர் எம் ஆர் ராதாவா பார்த்தால் ஃபாரினர் மாதிரி இருக்கிறாரே என்று சொல்வார்கள்.

அதே மாதிரி குதிரை ஓட்டுவதை வெள்ளைக்காரனிடம் தான் கற்றுக் கொண்டார். ஒரு முறை குதிரையின் மேல் ஒரு பக்கமாக ஏரியதுவுமே குதிரை ஓட ஆரம்பித்து விட்ட ஒத்த காலிலே நின்று மவுண்ட் ரோடு முழுவதும் வலம் வந்தார் எனது தந்தை. அவர் நடித்த படத்தை அவர் பார்த்ததே இல்லை நாங்கள் எல்லாம் அவர் நடித்த பாசம் படத்தின் பீரீவ்யு ஷோ அழைத்தோம் இவர் வரவில்லை, நாங்கள் மட்டும் சென்று போய் பார்த்துவிட்டு வந்தோம்.