'ராதா'வை தூக்க சொன்ன விஷாலுக்கு ராதாரவி பதிலடி!

  • IndiaGlitz, [Thursday,March 28 2019]

சமீபத்தில் நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை ஒட்டுமொத்த திரையுலகமும் கண்டனம் தெரிவித்தது. அந்த வகையில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தனது சமூக வலைத்தளத்தில் 'ராதா' என்ற பெண் பெயரை தனது பெயருக்கு முன்னாள் வைத்து கொண்டு ராதாரவி பெண்களை அருவருக்கத்தக்க வகையில் பேசுவது பொருத்தமில்லாதது. எனவே அவர் தனது பெயருக்கு முன் உள்ள ராதாவை நீக்கிவிடலாம் என்று தெரிவித்திருந்தார்

விஷாலின் இந்த கருத்துக்கு ஊடகம் ஒன்றின் பேட்டியில் பதிலளித்த ராதாரவி, 'ராதா' என்பது என்னுடைய அப்பாவின் பெயர். என்னுடைய அப்பாவின் பெயரைத்தான் நான் என் பெயருக்கு முன்னாள் வைத்துள்ளேன். விஷாலுக்க்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. அவருக்கு ஆர்கே நகரில் போட்டியிடவே தெரியாதபோது இதெல்லாம் எப்படி தெரிந்திருக்கும்' என்று கூறியுள்ளார்.

ராதாரவின் தந்தை எம்.ஆர்.ராதா என்பதும், அவர் எம்ஜிஆர், சிவாஜி காலத்து புகழ் பெற்ற நடிகர் என்பதும் அனைவரும் அறிந்ததே.