இனவெறிதான் மிகப்பெரிய வைரஸ், அதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க வில்லை – ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி காட்டம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல ஹாலிவுட் நடிகரான ஜார்ஜ் க்ளூனி “இனவெறிதான் மிகப்பெரிய வைரஸ், கடந்த 400 ஆண்டுகளாக இன்னும் மருந்து கண்டுபிடிக்க வில்லை” என்று காட்டமாக கருத்துத் தெரிவித்து இருக்கிறார். கடந்த மே 25 ஆம் தேதி போலிஸ் பிடியில் சிக்கிக்கொண்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு கொலை என்று பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல மாகாணங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது உலகத் தலைவர்களும் இச்சவம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஹாலிவுட் நடிகரான ஜார்ஜ் க்ளூனி அமெரிக்கப் பத்திரிக்கை ஒன்றிற்கு ஒரு கட்டுரையை அனுப்பியிருக்கிறார். மேலும் அந்தப் பத்திரிக்கையின் ஒரு செய்தியில் அவர் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு கைக்கொடுப்போம் எனக் கூறியதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது.
அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில் “கறுப்பினத்தவர்கள் கொல்லப்படுவதை நாம் எத்தனை முறை பார்த்திருப்போம். தமீர் ரைஸ், பிலாண்டோ, காண்டில், லக்வான், மெக் டொனால்ட் இப்போது ஜார்ஸ் ஃபிளாய்ட். ஆனால் மற்றவர்களை விட தற்போது நடந்திருக்கும் கொடூரம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது. 4 போலிஸ் காவலர்கள் கழுத்தை நெரித்து ஒரேடியாக ஒரு கறுப்பினத்தவரை கொலை செய்திருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடூரம். அதற்கெதிராக போராட்டங்கள் தற்போது வலுத்து வருகிறது. 1968 க்குப் பிறகு வலுவான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது என்றாலும் விளைவுகள் எப்படியிருக்கும் எனத் தெரியவில்லை. கடந்த 1992, 2014 களின் போதும் இதே போல போராட்டங்கள் நடைபெற்றன.
இதற்குப் பிறகு யாரும் இப்படி கொல்லப்பட மாட்டார்கள் என நம்புவோம். கடவுளை பிரார்த்திப்போம். ஆனால் இது முழுமையல்ல. சட்டங்களில் மாற்றம் வேண்டும். எங்கள் தெருக்களில் தொடர்ந்து இதுபோன்ற இனவெறி நடந்து கொண்டே இருக்கிறது. இதையெல்லாம் தவிர்த்து விட்டு நாங்கள் ஒரே நாடாக வாழ்ந்து வருகிறோம் எனச் சொல்லிக் கொள்கிறோம். இன்றைய அளவில் மனிதர்களை வாங்குவதோ விற்பதோ நடைபெறவில்லை. ஆனால் இதுபோன்ற இனவெறித் தாக்குதல்கள் அதற்கு சற்றும் குறைந்ததல்ல. முழுமையான சட்ட அமலாக்கமும், குற்றவியல் ரீதியிலான சட்டத்திருத்தங்களும் வேண்டும் எனத் தனது கட்டுரையில் கூறியிருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout