இனவெறி என்பது கிரிக்கெட்டிலும் இருக்கிறது!!! கொளுத்திப் போட்ட கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜமைக்கா நாட்டை சேர்ந்தவரும் வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணியின் வீரருமான கிறிஸ் கெயில் கால்பந்தில் மட்டும் அல்ல கிரிக்கெட்டிலும் இனவெறி தாக்குதல் இருக்கத்தான் செய்கிறது என தனது இன்ஸ்ட்ரா கிராம் பக்கத்தில் கொளுத்திப் போட்டு இருக்கிறார். அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற 46 வயதான கறுப்பினத்தர் போலீஸ் காவலில் இருந்த போது உயிரிழந்தார். அவருடைய உயிரிழப்பு கொலை என்று பிரேதச பரிசோதனை அறிக்கையும் வெளியாகி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து கடந்த மே 25 ஆம் தேதி முதற்கொண்டு அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் கிறிஸ் கெயில் உலகம் முழுவதும் இனவெறி தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நான் உலகம் முழுவதும் பயணம் செய்திருக்கிறேன். பல நேரங்களில் அத்தகைய வலியை நானும் உணர்ந்து இருக்கிறேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், “மற்றவர்களின் வாழ்கையைப் போலவே கறுப்பினத்தவர்களின் வாழ்க்கையும் முக்கியமானது, கறுப்பின மக்களை முட்டாள்களாக சித்தரிப்பதை நிறுத்துங்கள்” என காட்டமாக தனது இன்ஸ்டா கிராமில் பதிவிட்டு இருக்கிறார்.
மேலும் இனவாதம் என்பது “கால்பந்தில் மட்டும் அல்ல, அது கிரிக்கெட்டிலும் இருக்கிறது. கறுப்பு சக்தி வாய்ந்தது. கறுப்பு எனது பெருமை” எனவும் பதிவிட்டு இருக்கிறார். அமெரிக்காவில் நடந்து வரும் இனவெறிக்கு எதிரான போராட்டம் தற்போது உலகம் முழுவதும் உள்ள அனைவராலும் கவனிக்கப் பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்கு வெளிநாடுகளில் உள்ள கறுப்பின மக்களும் தங்களது ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர். அதோடு அமெரிக்க அரசு இந்தப் பிரச்சனையை தவறாக கையாண்டு வருகிறது எனவும் அவர்களது அணுகுமுறை ஒருபோதும் மாறுவதே இல்லை எனவும் கவலை தெரிவிக்கப் பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments