என்னை பத்தி பேச யாருக்கும் ரைட்ஸ் இல்லை: மாயா கேங்கிற்கு வார்னிங் கொடுத்த ரட்சிதா..
- IndiaGlitz, [Saturday,November 11 2023]
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான மாயா, தினேஷை வீழ்த்துவதற்காக ரட்சிதா குறித்து பேச வேண்டும் என்று பூர்ணிமாவுக்கு ஆலோசனை கூறிய நிலையில் இது குறித்து ரட்சிதா தனது சமூக வலைத்தளத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
என்னோட பர்சனல் வாழ்க்கை பற்றி பேச அங்கே யாருக்கும் உரிமை இல்லை, தகுதியும் இல்லை, எனக்கு என்ன நடந்தது என்று அனுபவித்த எனக்கு தான் தெரியும். ஒரு சில காரணங்களால் எங்களுக்குள் பிரச்சனை வந்திருக்கலாம், என்னோட டாபிக் பயன்படுத்தி யாரும் விளையாட வேண்டாம், நீங்கள் உங்களுக்காக விளையாடுங்கள்
என்னோட பர்சனல் பிரச்சனை உங்களுக்கு டாபிக் கிடையாது. குறிப்பாக என்டர்டைன்மெண்ட் ஷோவில் என்னுடைய பிரச்சனை பற்றி பேசுவதை நான் விரும்பவில்லை. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிடுவதில் எனக்கு விருப்பமில்லை
இம்மாதிரியான தரம் தாழ்ந்த விளையாட்டை விளையாட வேண்டாம். என்னுடைய பெயரை பயன்படுத்தி, என்னுடைய தனிப்பட்ட பிரச்சனைகளை பயன்படுத்தி விளையாடுவதை நான் அனுமதிக்க முடியாது. இத்துடன் புள்ளிங் குரூப் என்னை வைத்து விளையாடும் பிளானை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ரட்சிதாவின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.