'அடங்காத அசுரனுக்கு நான் கியாரண்டி.. 'ராயன்' சூப்பர் அப்டேட் தந்த எஸ்.ஜே.சூர்யா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ‘ராயன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்றும், மே 9ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள எஸ்ஜே சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் ‘ராயன்’ படத்தின் சூப்பர் அப்டேட்டை தெரிவித்துள்ளார். இந்த அப்டேட்டில் நாளை வெளியாக இருக்கும் சிங்கிள் பாடல் ’அடங்காத அசுரன்’ என்று கூறிய அவர் ’இந்த பாடலுக்கு நான் கேரண்டி என்றும் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அவர்கள் கம்போஸ் செய்த இந்த பாடல் சூப்பராக இருக்கும் என்றும் தனுஷும் இந்த பாடலை சேர்ந்துள்ளதால் இந்த பாடலின் வெற்றிக்கு நான் கேரண்டி என்றும் குறிப்பிட்டுள்ளார்
மேலும் இந்த பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குனராக பணிபுரிந்து உள்ளார் என்றும் இந்த பாடலை தனுஷ் எழுதியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இந்த பாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலை தனுஷ் பாடியிருக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது.
Guys shall I guarantee U something ADANGATHA ASURENDHAN is a sure sure shot trippy peppy grippy song by ISAI PUYAL @arrahman sir , ADHANGATHA ASUREN @dhanushkraja sir combo 🔥🔥tomorrow 1st single 👍👍stay tuned see u tomorrow 🙌sjs pic.twitter.com/m4qiIVKFr5
— S J Suryah (@iam_SJSuryah) May 8, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments