தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படப்பிடிப்பு: ராஷிகண்ணா பகிர்ந்த புகைப்படம்!

  • IndiaGlitz, [Wednesday,August 25 2021]

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான ராஷிகண்ணா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கி வந்த ’மாறன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொனார். இந்த படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்ட நிலையில் அடுத்த கட்டமாக மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பில் ராஷ்கண்ணாவும் கலந்து கொண்டுள்ளார்.

‘திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படத்தை நடிகை ராஷி கண்ணா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பதும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தனுஷ் நடித்த உத்தமபுத்திரன், குட்டி, யாரடி நீ மோகினி ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் தனுஷுடன் மீண்டும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர் என்பதை பார்த்தோம். மேலும் இந்த படத்தில் ராஷிகண்ணா மட்டுமின்றி பிரியா பவானி சங்கர் மற்றும் நித்யா மேனன் ஆகியோர்களும் முக்கிய வேடத்டில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆணுறை இல்லாததால் பாதுகாப்புக்காக இளைஞர் எடுத்த பயங்கர முடிவு… பலியான உயிர்!

அகமதாபாத்தில் காதலியுடன் உல்லாசமாக இருக்க நினைத்த இளைஞர் ஒருவர் ஆணுறை இல்லாததால் தன்னுடைய

ரூ.5 கோடிக்கு வாட்ச் வாங்கிய இந்தியக் கிரிக்கெட் பிரபலம்… அப்படியென்ன ஷ்பெஷல்?

இந்தியக் கிரிகெட் அணியில் ஆல்ரவுண்டராக இருந்துவரும் ஹர்திக் பாண்டியா சமீபத்தில் கைகடிகாரம் வாங்கிய

அஜித் படக்குழுவினரால் தாமதமாகும் சிரஞ்சீவி படம்: வைரல் வீடியோ

தல அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தால் சிரஞ்சீவி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தாமதமாக தகவல் வெளிவந்துள்ளது.

கே.டி.ராகவன் பாலியல் காணொளி எதிரொலி.....!மதன் டைரி YOUTUBE channel முடக்கம்....!

முன்னாள் தமிழக பாஜக பொதுச் செயலாளர் கேடி.ராகவன் குறித்த பாலியல் க

பிரியாணி பிரியர்களே உஷார்.....! பிரியாணி சாப்பிட்டதால் கல்யாண மாப்பிள்ளை உயிரிழப்பு....!

தன்னுடைய திருமணத்திற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அளவுக்கு