த்ரிஷாவின் 'ராங்கி' படம் குறித்த முக்கிய அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'பேட்ட', மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் '96' என தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து வரும் நடிகை த்ரிஷா, தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று 'ராங்கி'.
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட இந்த படத்தில் த்ரிஷா போல்டான கேரக்டர் ஒன்றில் நடித்து வருகிறார். 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக த்ரிஷா உள்பட படக்குழுவினர் அனைவரும் உஸ்பெகிஸ்தான் சென்றனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் 'ராங்கி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவிருப்பதாக லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைத்து வருகிறார்.
Get Ready for SouthQueen Trisha's #Raangi First Look ?? releasing today at 6pm. ??@ARMurugadoss @trishtrashers @Saravanan16713 @CSathyaOfficial @venketramg#RaangiFLAt6PM ??
— Lyca Productions (@LycaProductions) May 22, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments