கோலிவுட்டில் எண்ட்ரி ஆகும் பார்த்திபனின் இன்னொரு வாரிசு
Sunday, August 14, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், சிறந்த மேடைப்பேச்சாளர், கவிஞர் என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்து வரும் பார்த்திபன், 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தை அடுத்து தற்போது 'கோடிட்ட இடத்தை நிரப்புக' என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் சுசீந்திரன் இயக்கத்தில் 'மாவீரன் கிட்டு' உள்பட ஒருசில படங்களில் அவர் நடித்தும் வருகிறார்.
மேலும் பார்த்திபனின் மகள் கீர்த்தனா ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருதையும் பெற்றுள்ளார். மேலும் மணிரத்னம் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், விரைவில் ஒரு படத்தை இயக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் பார்த்திபனின் இன்னொரு வாரீசான அவரது மகன் ராக்கி என்ற ராதாகிருஷ்ணனும் விரைவில் இயக்குனராகவுள்ளதாகவும், இந்த படத்தை பார்த்திபனே தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. தற்போது இயக்குனர் விஜய்யிடம் 'தேவி எல்' படத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றியுள்ள ராக்கி முன்னணி நடிகர்களிடம் கதை கூறி வருவதாகவும், விரைவில் அவர் இயக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments