close
Choose your channels

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்

Monday, July 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'சீமராஜா' திரைப்படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் 'ஒருகல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலம் இயக்குனராகி ஒருசில வெற்றி படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கும் ஒரு படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது ராதிகா மற்றும் யோகிபாபு ஆகிய இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

இந்த படத்தில் ஏற்கனவே சதீஷ் காமெடி வேடத்தில் நடிக்கவுள்ள நிலையில் தற்போது யோகிபாபுவும் இணைந்துள்ளதால் இந்த படத்தில் காமெடிக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்.ராஜேஷ் படங்கள் என்றாலே காமெடிக்கு முக்கியத்துவம் தரப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது எம்.ராஜேஷுடன் சிவகார்த்திகேயன், யோகிபாபு, சதீஷ் ஆகிய மூவர் கூட்டணி காமெடி கலக்க காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment