இன்று முத்துகுமாரிடம் ஒரு முக்கிய விஷயம் சொல்ல இருந்தேன். ஆர்.பார்த்திபன் வேதனை

  • IndiaGlitz, [Sunday,August 14 2016]

பிரபல பாடலாசிரியர் முத்துகுமாரின் மறைவிற்கு கோலிவுட் பிரபலங்கள் ஒவ்வொருவராக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர், இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் இன்று அவரிடம் தனது படத்திற்கான பாடலின் சூழலை சொல்லி பாடல் எழுத சொல்ல வேண்டும் என்று நினைத்ததாகவும், ஆனால் அதற்குள் அவரது மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் மெளனமாகியதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: சென்ற மாதம் ” எனக்கு எப்ப ட்யூன் அனுப்புறீங்க ? நான் எழுதுறேனில்லே உங்க படத்திலே?” என்று உரிமையாய் கேட்டார். இன்று அதிகாலை படப்பிடிப்பு முடிந்து படுக்க செல்கையில் உறங்கி எழுந்ததும் பாடலின் சூழலை அவரிடம் சொல்லி எழுத சொல்ல வேண்டும் என நினைத்தபடியே
Na. Muthukumar என்றிருந்த contact-ஐ திறந்து பார்த்த எனக்கு அதிர்ச்சி. அங்கு அவருடைய எண்ணே இல்லை. அதெப்படி? நாங்கள் தான் அடிக்கடி பேசுவோமே என்று குழம்பியபடி மீண்டும் தேடினேன்.
Kavingar na. Muthukumar என்ற contact-டில் அவர் எண் இருந்தது. தொடர்பு கொண்டேன்”not reachable” என்றது. சற்று நேரங்கழித்து முயல முடிவு செய்து வந்துள்ள what's app செய்திகளை படித்தேன். நண்பர் சுரேஷ் சந்திரா அனுப்பிய மரணச் செய்தியில் மவுனித்தேன். நண்பனை இழந்த வருத்தத்தை பாதியாக குறைத்துக் கொள்ள காரணம். சாகாவரம் பெற்ற கவிஞனாக அவரின் எழுத்தும், வரிகளும், படைப்புகளும் நம்மிடம் இருப்பது' என்று பதிவு செய்துள்ளார்.

More News

முத்துக்குமாரின் தன் நலம்பேணாத் தற்கொலையால் கோபமே: கமல்ஹாஸன்

பிரபல பாடலாசிரியர் நா.முத்துகுமார் மறைவால் தமிழ் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கும் நிலையில் அவரது மறைவிற்கு கோலிவுட்டின் பிரபலங்கள்...

'தனி ஒருவன்' நிறுவனத்துடன் கனெக்சன் ஆன சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த படத்தின் ரிலீஸ் உரிமைகள் போட்டி போட்டு வியாபாரம் ஆகிவருகின்றது...

கோலிவுட்டில் எண்ட்ரி ஆகும் பார்த்திபனின் இன்னொரு வாரிசு

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், சிறந்த மேடைப்பேச்சாளர், கவிஞர் என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்து வரும் பார்த்திபன், 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'...

விஜய்யின் தெறி'க்கு அடுத்து கார்த்தியின் 'காற்று வெளியிடை

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பைலட் வேடத்தில் கார்த்தி நடித்து வருவது அனைவரும் அறிந்ததே...

விக்ரம் படத்தில் இணைந்த பிரபல நடிகையின் மகள்

சீயான் விக்ரம் நடித்து முடித்துள்ள 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ்...