சினிமாவை விட்டு விலக முடிவெடுத்தேன்.. 'டீன்ஸ்' ரிலீசுக்கு பின் பார்த்திபன் அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,July 14 2024]

பார்த்திபன் நடித்து இயக்கிய ‘டீன்ஸ்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் கமெண்ட்ஸ் குவிந்து வருவதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

’இந்தியன் 2’ என்ற பிரமாண்ட திரைப்படத்துடன் வெளியான இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக விநியோகிஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். மேலும் நாளை முதல் இந்த படத்திற்கு திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கும், கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் குறித்தும் பார்த்திபன் நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளத்தில் செய்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த பதிவு இதோ:

Friends
சத்தியமா சொல்றேன்
TEENZ -க்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து கிடைக்கலைன்னா நான் மிகவும் நேசித்த உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போயிட முடிவெடுத்தேன். இப்ப நீங்க எல்லாரும் ஒரு முகமா குடுக்குற பாராட்டுல நான் ‘ஓ’ன்னு சந்தோஷத்தில அழுவுறது உங்களுக்கு கேக்க வாய்ப்பே இல்லே. இது போதாது இன்னும் ஆதரவு தந்து பலரும் பாக்க உதவி செஞ்சி என்னை சந்தோஷத்தில சாகடிங்க. அடுத்த தலைமுறை ரசிக்கும் படியும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக ஒரு science fiction & fantasy thought ல் எடுக்கப் பட்ட இப்படம் பள்ளிகளும் கல்லூரிகளும் இல்லங்களும் கொண்டாட வேண்டும்.


நன்றி :பார்வையிட்டவர்களின் பாதங்களுக்கு
வரம் : வரவிருக்கும் தூய்மையான வெற்றி.
நனைந்த இமைகளோடு


இராதாகிருஷ்ணன் பார்த்திபன்