close
Choose your channels

ஹன்சிகாவை வித்தியாசமாக மாற்றிய பிரபல இயக்குனர்.. மேக்கிங் வீடியோ வைரல்..

Saturday, June 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் அழகான நடிகைகளில் ஒருவரான ஹன்சிகாவை வித்தியாசமாக பிரபல இயக்குனர் ஒருவர் தனது படத்தில் காட்டி இருக்கும் மேக்கிங் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் ஆர் கண்ணன் என்பதும் இவர் ’ஜெயங்கொண்டான்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி பிறகு பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இவர் ’காந்தாரி’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தில் ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மெட்ரோ சிரிஷ் உட்பட பலர் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியானது. இந்த வீடியோவில் ஹன்சிகா தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

அழகு பொம்மையாக பல படங்களில் ஹன்சிகாவை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தில் வித்தியாசமாக இருப்பதை பார்த்து ஹன்சிகாவை இந்த அளவுக்கு யாராலும் வித்தியாசப்படுத்த முடியாது என்று கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் கதை, இயக்குனர் ஆர் கண்ணனின் மற்ற படங்களின் கதையை விட வித்தியாசமாக இருப்பதாகவும் ஒரு நல்ல திகில் படமாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருப்பதாகவும் சிலர் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆர் கண்ணன் இயக்கத்தில் முத்து கணேஷ் இசையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் ரிலீசாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment