ஆர்.கே.நகரில் ஆரம்பிக்கப்பட்ட புதிய பிசினஸ்கள் என்ன ஆச்சு?

  • IndiaGlitz, [Wednesday,April 19 2017]

சென்னை ஆர்.கே.நகரில் கடந்த மாதம் இடைத்தேர்தல் என்ற அறிவிப்பு வெளியானவுடன் அப்பகுதி மக்கள் வழக்கமான பார்த்து வந்த வேலையை தற்காலிகமாக கைவிட்டு புதிய வேலைவாய்ப்புகளை தாங்களாகவே உருவாக்கி கொண்டனர். இதனால் அவர்கள் செல்வசெழிப்பில் மிதந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
உதாரணமாக வேட்பாளர்கள் பின்னால் ஒரு கொடியை தூக்கி கொண்டு சென்றால் போதும் மூன்று வேளை சாப்பாடு மற்றும் ரூ.500 சம்பளம். மேலும் தலைவர் ஒருவர் வாக்கு கேட்க வருகிறார் என்றால் அவருக்கு போடப்படும் மாலைகள், அவர் மீது தூவப்படும் பூக்களுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை வருமானம் கிடைத்துள்ளது.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு தெருவுக்கு வாக்கு கேட்க வரும் வேட்பாளரின் சின்னத்தை கோலமாக வீட்டின் எதிரே போட்டால் ரூ.100 முதல் ரூ.500வரை அன்பளிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பணி செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அவருடன் வருபவர்களுக்கு அந்த பகுதி மக்களே சைவ, அசைவ உணவுகளை மணக்க மணக்க சமைத்து சாப்பாடு போட்டுள்ளனர். இதற்கும் மெனு வகைக்கு ஏற்ப ரூ.10000 முதல் ரூ.15000 வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.
எனவே ஆர்.கே.நகரில் கொடிகட்ட பறந்த புதிய பிசினஸ்கள் திடீரென தேர்தல் ரத்து அறிவிப்பு காரணமாக காணாமல் போய் தற்போது மக்கள் தங்களுடைய வழக்கமான பணியை தொடங்கிவிட்டனர். இருப்பினும் எப்பொழுது தேர்தல் நடைபெறுமோ, அப்போது இந்த பிசினஸ்கள் மீண்டும் முளைத்துவிடும் என்பது குறிப்பிடதக்கது.

More News

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: இடைத்தரகர்கள் காட்டில் பெய்த மழை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன் என்பது அனைவருக்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்த உண்மை பணப்பட்டுவாடாதான்.

ஸ்டார் ஓட்டலுக்கு நிகராக எகிறிய ஆர்.கே.நகர் வீட்டு வாடகை

ஸ்டார் ஓட்டல்களில் தங்க ஒருநாள் வாடகை ஆயிரக்கணக்கில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

பணப்பட்டுவாடா: ஆர்.கே.நகரில் நடந்த நல்ல விஷயங்கள்

சென்னை ஆர்.கே.நகரில் அதிகளவிலான பணப்பட்டுவாடா நடந்த காரணத்தால் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

தல அஜித்தின் 'விவேகம்' டீசரின் ரன்னிங் டைம் மற்றும் முக்கிய தகவல்

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் டீசர் அவருடைய பிறந்த நாளான மே 1ஆம் தேதி வெளிவரவுள்ளது என்பது உறுதியாகிவிட்டதை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் இந்த டீசரின் ரன்னிங் டைம் மற்றும் பிற தகவல்கள் வெளிவந்துள்ளது...

விஜய்யின் 'தெறி'யுடன் கனெக்சன் ஆகும் விஜய்சேதுபதியின் 'சீதக்காதி'

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 25வது படமான 'சீதக்காதி' படத்தை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...