எங்களை நேரடியாக சந்தியுங்கள். பிரதமர் மோடிக்கு ஆர்ஜே பாலாஜி வேண்டுகோள்

  • IndiaGlitz, [Thursday,January 19 2017]

சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் குறித்து நடிகர் ஆர்ஜே பாலாஜி அவ்வப்போது கருத்து தெரிவித்தும், போராட்டத்தில் பங்கேற்றும் வருகிறார். இந்நிலையில் இன்று அவர் கோவையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மாண்புமிகு பிரதமரிடம் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக பிரதிநிதிகளை சந்திக்கப் போகிறீர்கள் என்றால் அதைச் செய்ய வேண்டாம்.
ஏனென்றால் அவர்கள் எப்போதும் எங்களுக்கான சரியான பிரதிநிதியாக செயல்பட்டதில்லை. எங்களை நேரடியாக சந்தியுங்கள். நாங்கள் பேசுவதை ஒருமுறை கேளுங்கள். அரசாங்கம் மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. சட்டங்களும் மக்களுக்காகத் தான். ஒரு மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் ஒரு சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அதை மாற்றலாம்.
நீங்கள் எங்களை விரைவில் சந்திப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம். நாங்கள் பெருமைமிகு இந்தியர்கள். ஆனால் அது தமிழன் என்ற அடையாளத்தை விடுத்து அல்ல" என்று ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.

More News

அவசர சட்டம் இல்லை. கைவிரித்தார் மோடி

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

அவசர சட்டம் வராவிட்டால் முதல்வரை முற்றுகையிடுவோம். பிரபல இயக்குனர்

ஜல்லிக்கட்டு போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளதால் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்

ஜல்லிக்கட்டு பிரச்சனை: முதல்வரிடம் மோடி கூறியது என்ன?

தமிழகத்தில் இளைஞர்கள் நடத்தி வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்த நேற்றிரவு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார்

வெளிநாட்டு பானங்களை விற்க மாட்டோம். விழிப்புணர்வு பெற்ற வணிகர்கள்

வெளிநாட்டு பாங்களில் பூச்சி மருந்து கலந்துள்ளதால் அதை உபயோகிக்க வேண்டாம் என்று ஏற்கனவே பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை அந்நிய நாட்டு குளிர்பானங்களை வாங்கி விற்க மாட்டோம் என வணிகர்கள் அறிவித்து வருகிறனர். முதல்கட்டமாக தேனி ம

எனது மாநிலம் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. விஸ்வநாதன் ஆனந்த்

சென்னை மெரீனா கடற்கரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்களின் எழுச்சி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.