என் வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்தேன்… மனம் வருந்திய முக்கிய வீரர்!

தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளைத் தவிர வேறெந்த போட்டிகளிலும் இடம்பெறாமல் இருந்தார். அதேபோல கடந்த ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியிலும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்துவந்தார். இதனால், மனம் வேதனை அடைந்தத்தைத் தற்போது கொட்டித் தீர்த்திருக்கிறார்.

சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தற்போது சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த 3 ஆவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர் 80 டெஸ்ட் போட்டிகளில் 419 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹர்பஜனை முந்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி சர்வதேச அளவில் முக்கிய சாதனையைப் படைத்து இருக்கும் அஸ்வின் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மனவேதனையில் இருந்து வந்த அஸ்வினுக்கு கடந்த 2020 பிப்ரவரியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டெஸ்ட் போட்டியிலும் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

இதனால் “வாழ்க்கையில் என்ன செய்வது என்ற அச்சம் எழுந்தது. எனது கிரிக்கெட் வாழ்க்கை இனி முடிந்துவிட்டதா என மனம் வருத்தப்பட்டுள்ளேன். ஆனால் கடவுளின் உதவியால் அவற்றையெல்லாம் தற்போது மாற்றி அமைத்துள்ளேன்“ என்று அஸ்வின் தான் பட்ட துயரத்தைத் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதையடுத்து அஸ்வினுக்கு கடந்த 4 ஆண்டுகளாக டி20, ஒருநாள் போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்படாமல் இருந்தது ஏன் என்பது போன்ற கேள்வியை ரசிகர்கள் பலரும் எழுப்பி வந்தனர். தற்போது டி20 உலகக்கோப்பை போட்டி மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அஸ்வின் பந்துவீச்சில் அசத்தி வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.