இதுக்கும் பிட்ச்தான் காரணமா? பிரஸ்மீட்டில் பொங்கிய இந்திய வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் அதிரடி காட்டி வருகின்றனர். இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் கிரவுண்ட் ஸ்பின் பவுலிங்கிற்குத்தான் சாதகமாக இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் மெச்சம் அளவிற்கு இங்கு ஒன்றும் இல்லை என இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதையடுத்து 2ஆவது டெஸ்ட் மேட்சின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின் பந்து வீச்சாளரான அஸ்வினுக்கும் இதேபோன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதனால் கொதிப்படைந்த அஸ்வின் ஸ்பின் பவுலிங் என்பது ஒரு கலை. அதில் பல்வேறு நுணுக்கங்கள் இருக்கின்றன. Speed பவுலிங் மைதானத்தில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வரும்போது ஸ்விங் ஆவதை தடுத்து ஆட முடியாது. ஆனால் ஸ்பின் பவுலிங் கிரவுண்டில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வரும் பந்து ஸ்விங் ஆனாலும் அதை எளிதாகத் தடுத்தாட முடியும்.
இங்கிலாந்து வீரர்கள் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவைவிட அதிரடியாகவே ரன்களை குவித்து இருந்தனர். இருந்தும் தொடர்ந்து சேப்பாக்கம் மைதானத்தை குற்றம் சொல்லியே வருகிறார்கள். மேலும் விக்கெட்டிற்கும் பிட்ச்தான் காரணம் எனக் கூறி வருகின்றனர். இது என்ன மாதிரியான கருத்து என அஸ்வின் பிரஸ் மீட்டில் பேசினார். இந்தக் கருத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மேட்சில் முதலில் டாஸ் வென்ற இந்தியா 329 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தது. அதையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து வீரர்கள் வெறும் 134 ரன்களிலேயே சுருண்டனர். இந்தப் போட்டியின்போதுதான் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதனால் இங்கிலாந்து 249 ரன்கள் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. தற்போது 2 ஆவது இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்தியா நேற்று 54 க்கு 1 விக்கெட் என்ற நிலையில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் கிரிக்கெட்டைவிட தற்போது இந்திய வீரர்கள் பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் அசத்தி வருவதால் இந்தப் போட்டியில் வெற்றியை எதிர்ப்பார்க்கலாம் என்றும் கருத்து கணிப்புகள் கூறப்படுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments