“சாத்தானின் வேலையை தோற்கடித்து விட்டோம்” - தான்சானிய அதிபரின் மகிழ்ச்சி செய்தி!!!

  • IndiaGlitz, [Wednesday,June 10 2020]

 

கொரோனா அரக்கன் உலகம் முழுவதும் கொடூரமான தாக்குதலை ஏற்படுத்தி வரும் வேளையில் சில நாடுகளில் மட்டும் கொரோனா கட்டுக்குள் வந்து இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. கடந்த வாரத்தில், கொரோனா சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளியும் வீட்டிற்கு திரும்பியதாக நியூசிலாந்து அதிபர் ஜெசிந்தா குறிப்பிட்டு இருந்தார். அதையடுத்து திரையரங்குகள், விளையாட்டு அரங்குகள் அனைத்தும் திறந்து வைக்கப்பட்டு இருக்கின்றன. வாடிகன், பிஜி போன்ற பகுதிகளிலும் கொரோனா கட்டுக்குள் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. வடகொரியாவில் இதுவரை ஒரு கொரோனா பாதிப்பு கூட அறிவிக்கப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தற்போது தான்சானியாவும் இணைந்து கொண்டு இருக்கிறது.

முன்னதாக, கொரோனா பரிசோதனையில் பப்பாளி, ஆடு, இன்ஜின் ஆயிலுக்கும் பாசிட்டிவ் வருகிறது என நக்கலடித்த தான்சானியாவின் அதிபர் ஜான் மகுபூலி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில் சாத்தானின் வேலையை தோற்கடித்து விட்டதாகத் தெரிவித்து இருக்கிறார். உண்மையில் தான்சானியாவில் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. முறையான பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை என்ற குற்றச் சாட்டை சர்வதேச ஊடகங்கள் முன்வைத்து இருந்தன. அதோடு அதிபரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த சுகாதாரத் துறை அமைச்சர் பதவி விலக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறை பதிவேற்றுக் கொண்ட சுகாதாரத் துறை அமைச்சரும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பதவி விலக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது தான்சானியா அதிபர் கொரோனாவில் இருந்து முற்றிலும் விடுபட்டு விட்டதாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதிக்குப் பிறகு கொரோனா நோயாளிகள் பற்றிய எந்த புள்ளி விவரத்தையும் அந்நாடு வெளியிட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அமலில் இருந்துவந்த ஊரடங்கையும் அதிபர் விலக்கி இருக்கிறார். அதுமட்டுமல்லாது கொரோனா பரிசோதனை கருவிகளால் பலர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதிபர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் வரை அந்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை 509 ஆகவும் உயிரிழப்பு 21 ஆகவும் பதிவாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நீ எப்படி கோயிலுக்குள்ளே வரலாம்? வெறுப்பில் பட்டியலினச் சிறுவனுக்கு நடந்த கொடூரம்!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு பட்டியலினச் சிறுவன், சிவன் கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்ததால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனா வைரஸ் ஆகஸ்ட் மாதத்திலேயே பரவத் தொடங்கிவிட்டது!!! கொளுத்திப் போட்ட புதிய ஆய்வு!!!

கொரோனா வைரஸ் பரவலைக் குறித்து உலக நாடுகளிடையே போர் மூளும் அளவிற்கு கடும் சர்ச்சை இருந்து வருகிறது

கொரோனா பரபரப்பு: எதிரொலி: 10 அடி தூரத்தில் நின்று நோயாளியை பரிசோதனை செய்த மருத்துவர் 

கொரோனா பரபரப்பு பலரது இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக மாற்றிவிட்டது என்பது அனைவரும் அறிந்ததே. தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதற்காக முற்றிலும் தலைகீழாய் மனித வாழ்க்கை மாறியுள்ளது

30 வினாடி சந்தோஷம் கொடுப்பது என் வேலையில்லை: ரசிகருக்கு சாட்டையடி பதிலளித்த தமிழ் நடிகை

சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவரை 'உங்களுக்கு 30 நிமிட சந்தோசத்தை கொடுக்கும் ஆள் நான் இல்லை' என்று சாட்டையடி பதில் கொடுத்த நடிகை

ஆபாச நடிகையாக மாறிய விளையாட்டு வீராங்கனை: பணம் கொட்டுவதாக பேட்டி

முழு நேர கார் ரேஸ் வீராங்கனையாக இருந்த இளம்பெண் ஒருவர் அதில் வருமானம் சரியாக இல்லை என்பதற்காக ஆபாச நடிகையாக மாறி விட்டதாகவும் தற்போது பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுவதாகவும்