அவர்கள் கிருஷ்ணன்,அர்ஜுனன் கிடையாது.. துரியோதனனும் சகுனியும்..! - சித்தார்த். #JamiaProtest
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சித்தார்த் மோடியையும் அமித்ஷாவையும் குறிப்பிட்டு அவர்கள் இருவரும் கிருஷ்ணனும் அர்ஜுனனும் கிடையாது துரியோதனனும் சகுனியும். பல்கலைக்கழகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்துங்கள் என தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக டெல்லியில் உள்ள ஜமியா பல்கலைகழகத்தில் மாணவர்கள் போராட்டத்தை தொடங்கினர். இதை நிறுத்துவதற்காக நேற்று இரவு டெல்லி காவல்துறையானது அதிரடியாக பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தது. மின்சாரத்தை நிறுத்திவிட்டு பார்த்த அத்தனை மாணவர்களையும் அடித்து துன்புறுத்தியுள்ளது. மாணவிகள் மீதும் பாலியல் எல்லை மீறல் நிகழ்ந்துள்ளது.
அரசின் இந்த செயலுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு அலைகள் கிளம்பியுள்ளன. #JamiaProtest என்ற ஹாஸ்டேக் ஆனது டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இது பற்றி கருத்து கூறியுள்ள நடிகர் சித்தார்த் மாணவ, மாணவிகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டணங்களை பதிவு செய்துள்ளார். அப்போது மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணன் அர்ஜுனன் என்று கூறுகிறார்கள் ஆனால் அவர்கள் துரியோதனனும் சகுனியும் போன்றவர்கள் என்று கூறியுள்ளார்.
These two are not Krishna and Arjuna. They are Shakuni and Duryodhana.
— Siddharth (@Actor_Siddharth) December 16, 2019
Stop attacking #universities! Stop assaulting #students! #JamiaMilia #JamiaProtest
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com