அவர்கள் கிருஷ்ணன்,அர்ஜுனன் கிடையாது.. துரியோதனனும் சகுனியும்..! - சித்தார்த். #JamiaProtest

நடிகர் சித்தார்த் மோடியையும் அமித்ஷாவையும் குறிப்பிட்டு அவர்கள் இருவரும் கிருஷ்ணனும் அர்ஜுனனும் கிடையாது துரியோதனனும் சகுனியும். பல்கலைக்கழகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்துங்கள் என தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக டெல்லியில் உள்ள ஜமியா பல்கலைகழகத்தில் மாணவர்கள் போராட்டத்தை தொடங்கினர். இதை நிறுத்துவதற்காக நேற்று இரவு டெல்லி காவல்துறையானது அதிரடியாக பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தது. மின்சாரத்தை நிறுத்திவிட்டு பார்த்த அத்தனை மாணவர்களையும் அடித்து துன்புறுத்தியுள்ளது. மாணவிகள் மீதும் பாலியல் எல்லை மீறல் நிகழ்ந்துள்ளது.

அரசின் இந்த செயலுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு அலைகள் கிளம்பியுள்ளன. #JamiaProtest என்ற ஹாஸ்டேக் ஆனது டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இது பற்றி கருத்து கூறியுள்ள நடிகர் சித்தார்த் மாணவ, மாணவிகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டணங்களை பதிவு செய்துள்ளார். அப்போது மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணன் அர்ஜுனன் என்று கூறுகிறார்கள் ஆனால் அவர்கள் துரியோதனனும் சகுனியும் போன்றவர்கள் என்று கூறியுள்ளார்.

 

More News

ராகவா லாரன்ஸ் தொடங்குவது புதிய அரசியல் கட்சியா?

சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதில் இருந்தே ராகவா லாரன்ஸ் குறித்த செய்திகள்

மசாஜ் செண்டர் சென்ற தொழிலதிபரை நிர்வாணப்படுத்தி மிரட்டிய கணவன் மனைவி

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் புதுவையில் உள்ள மசாஜ் செண்டருக்கு சென்றிருந்த நிலையில்  மசாஜ் செண்டரின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி தொழிலதிபரை நிர்வாணப்படுத்தி

'தளபதி 65' குறித்த முக்கிய தகவல்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சென்னை, டெல்லி

டிக்டாக் நட்பால் விபரீதம்: மனைவியை தொலைத்த கணவரின் பரிதாப நிலை!

டிக் டாக்கில் வீடியோ பதிவு செய்வது என்பது ஆரம்பத்தில் ஒரு பொழுதுபோக்காக இருந்த நிலையில் தற்போது அதுவே பலருக்கு போதையாக மாறிவிட்டது.

'தளபதி 64' படத்தில் இணைந்த மேலும் இரண்டு நடிகர்கள்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று