கொரோனாவுக்கு “லாக் டவுன் மட்டுமே தீர்வாகாது“- WHO அறிவுறுத்தல்

  • IndiaGlitz, [Tuesday,March 24 2020]


“ஊரடங்கு எனப்படும் லாக்டவுனை மட்டும் அறிவித்துவிடுவது கொரோனா பரவலுக்கு முழுமையான தீர்வாகாது“ என உலக சுகாதார அமைப்பின் அவசரகால நிபுணர் Mike Ryan கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவைப் பிற்பித்துள்ளன. பஞ்சாப், ராஜஸ்தான், மிசோரம், காஷ்மீர், டெல்லி, சண்டிகர் ஆகிய பகுதிகளில் நேற்று முதலே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஹரியாணா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, உத்தரகாண்ட், அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், நாகாலாந்து ஆகிய 12 மாநிலங்கள் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் WHO அதிகாரியின் அறிவுறுத்தல் வெளியாகியிருக்கிறது. “நாம் உண்மையில் கவனம் செலுத்த வேண்டியது என்னவென்றால் நோய்தொற்று ஏற்பட்டவர்களை கண்டுபிடித்து வைரஸ் அவர்களை தனிமைப்படுத்துவது, அவர்களின் தொடர்புகளைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்துவது” என்று மைக் ரியான் தெரிவித்து இருக்கிறார்.

வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளவர்களைக் கண்டுபிடிக்காமல் வெறுமனே பூட்டிவைப்பது ஆபத்தில் முடியும். வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சையை அளிக்க வேண்டும். மேலும், அனைத்துப் பகுதிகளிலும் பொதுசுகாதார நடவடிக்கைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும். சுகாதார நடவடிக்கைகள் மேம்படுத்த நிலையில் இல்லாவிட்டால் ஊரடங்கு தளர்த்தப்படும் போது மீண்டும் ஆபத்தை விளைவிக்கும்.


ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பெரும்பகுதி சீனா மற்றும் பிற ஆசிய நாடுகளைப் பின்பற்றி தற்போது தங்களது நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. பெரும்பாலான பணியாளர்கள் வீடுகளில் இருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

உலக நாடுகள் முழுவதும் பள்ளி, விடுதிகள், பார்கள் போன்ற மக்களின் தொடர்புகளை முழுமையாகத் தடைசெய்யாவிட்டால் விளைவுகள் மோசமாகி விடும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேலும் பிரிட்டனில் கடுமையான தடைகளும் அமலில் இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.

மேலும், Mike Ryan கூறும்போது, தடுப்பூசி கண்டுபிடிப்பில் உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. அமெரிக்காவில் மட்டும் ஒரு மருந்து சோதனைச் செய்யப் பட்டு இருக்கிறது. மேலும், தடுப்பூசிகள் உலகின் பயன்பாட்டிற்கு கண்டிப்பாக வரும். ஆனால் தற்போது செய்ய வேண்டிய செயல்பாடுகளை முறையாக செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
 

More News

ஆண்டவனே உங்க பக்கம்தான்: ரஜினியை வாழ்த்திய மூன்று பிரபலங்கள்

உலகமே கொரோனா அச்சுறுத்தலில் பரபரப்பாக இருந்தாலும் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி டிஸ்கவரி சானலில் ஒளிபரப்பப்பட்ட போது

மதுரை நபரை மர்மமாக தாக்கிய கொரோனா வைரஸ்: அதிர்ச்சி தகவல்

உலகிலுள்ள மனித இனத்தையே கடந்த சில மாதங்களாக ஆட்டுவித்து வரும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது 

சூர்யாவை அடுத்து பெப்சி தொழிலாளர்களுக்கு உதவிய பிரபல நடிகர்

கொரோனா காரணமாக வேலையின்றி, வருமானம் இன்றி இருக்கும் பெப்ஸி தொழிலாளர்களுக்காக நடிகர், நடிகைகள் உதவ  வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணிவின் கோரிக்கையை

கச்சா எண்ணெய் வீழ்ச்சி!!! அரபுநாடுகள் – ரஷ்யா முட்டிக்கொண்ட கதை!!!

மார்ச் 6 ஆம் தேதி வியன்னாவில் நடைபெற்ற ஒபேக் கூட்டமைப்பு நாடுகள் மற்றும் அதன் உறுப்பு நாடுகளுக்கிடையிலான கருத்தரங்கு நடைபெற்றது.

பெப்சி தொழிலாளர்களுக்கு கைகொடுத்த விஜய் ரசிகர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக தமிழ் திரையுலகமே முடங்கி இருக்கும் நிலையில், தின வேலை செய்யும் சினிமா தொழிலாளர்கள் வேலையின்றி வருமானமின்றி பசியும் பட்டினியுமாக குடும்பத்துடன் இருக்கின்றார்கள்.