“உடைந்த விரலுடன் 4 போட்டிகளில் 439 ரன்கள் எடுத்தேன்” - மனம் திறந்த கிரிக்கெட் வீரர் ஷ்ரயாஸ் ஐயர்!!!

 

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் வீரராக இடம்பிடித்து இருக்கும் இளம் வீரர் ஷ்ரயாஸ் ஐயர். தற்போது இந்திய அணிக்காக ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வரும் இவர் தனது முதல் ஐபிஎல் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். சில ஆண்டுகளாகவே இந்திய அணிக்கு மிடில் ஆர்டர் விளையாட்டு வீரர் இல்லாமல் இருப்பதாக விமர்சனம் எழுந்தன. கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி திணறியதாகவும் கூறப்பட்டது. தற்போது இந்த இடத்தைப் ஓரளவு பூர்த்தி செய்யும் வீரராக உருவெடுத்து இருக்கிறார் ஷ்ரேயாஸ் ஐயர்.

தற்போது ஐபிஎல் விளையாட்டு போட்டிகளில் இவர் களம் காண்கிறார். அதோடு 2015 இல் இருந்து ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக இவர் விளையாடி வருகிறார். 2018 இல் ஐபிஎல் போட்டி நடைபெற்ற போது கவுதம் கம்பீர் வெளியேறினார். அந்த இடத்தை பூர்த்தி செய்து கேப்டன் அவதாரத்தையும் எடுத்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து 2 சீசனிங் போட்டிகளில் இவரே கேப்டனாக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது 2015 இல் சந்தித்த இக்கட்டான சந்தர்ப்பத்தைக் குறித்து பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.

”கடந்த 2015 இல் ஐபிஎல் சீசன் தான் எனக்கு முதல் சீசன். அந்த சீசனில் உடைந்த விரலுடன் முழு சீசனிலும் ஆடி 439 ரன்கள் அடித்தேன். எனது விரலில் அடிபட்டிருந்தது. கேரி கிறிஸ்டனுக்கு தெரியும். ஃபீல்டிங் செய்யும்போது, எங்கேயாவது ஒளிந்து நின்றுகொள். நீ அணிக்காக பேட்டிங் ஆடினால் போதும் என்று கூறி எனக்கு வாய்ப்பளித்தார். நிறைய பேருக்கு இந்த விஷயம் தெரியாது” என்று ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்து உள்ளார். 2015 இல் நடைபெற்ற ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்காக 4 போட்டிகளில் இவர் 439 ரன்களை குவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.