“கொரோனா கலகக்கார மனைவியைப் போன்றது” – சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட இந்தோனேசிய அமைச்சர்!!!

  • IndiaGlitz, [Wednesday,June 03 2020]

 

கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வந்தாலும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் முழுக்க ஊரடங்கைத் தளர்த்தி வருகின்றன. தற்போது இந்தோனேசியாவிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களிடம் உள்ள அச்சத்தைப் போக்கும் விதமாக அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் முகமது மஹ்புத் எம்டி ஒரு வேடிக்கையான கருத்தைத் தெரிவித்து இருக்கிறார். தற்போது அந்தக் கருத்துத்தான் எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கிறது.

இந்தோனேசியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் முகமது மஹ்புத் எம்டி அந்நாட்டின் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுடன் வீடியோ கான்பரஸில் பேசிய போது என்னுடைய நண்பர்கள் கொரோனாவை பற்றி ஒரு கருத்தை பகிர்ந்து இருக்கிறார்கள் என்று கூறினார். அதில் “கொரோனா உங்கள் மனைவியைப் போன்றது, ஆரம்பத்தில் நீங்கள் அதைக் கட்டுப்படுத்த முயற்சித்தீர்கள். பிறகு உங்களால் முடியாது என்பதை உணருகிறீர்கள். அதனுடன் வாழப் பழகிக்கொண்டு விட்டீர்கள்” எனப் பேசியிருக்கிறார். இது நகைச்சுவை ரீதியில் பகிரப்பட்டது என அதிகாரிகள் மட்டத்தில் தெரிவித்து இருந்தாலும் தற்போது அந்நாட்டில் உள்ள பெண்கள் பாதுகாப்பு குழுக்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது.

இந்தோனேசியாவில் கொரோனா பரிசோதனைகளை குறைவாகவே நடத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வரும் நிலையில் அமைச்சர் இப்படி மேலோட்டமான கருத்தை வெளியிட்டு இருக்கிறார். அமைச்சரின் இந்தக் கருத்து பாலியல் ரீதியான கருத்தாக இருக்கிறது, இத்தகைய மனநிலையில் அதிகாரிகள் கருத்துகளை வெளியிடக்கூடாது எனவும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. பொருளாதார ரீதியான தாக்கத்தை தவிர்ப்பதற்கு அந்நாட்டில் ஊரடங்கு விதிமுறைகள் பெரும்பாலும் விலக்கிக் கொள்ளப்பட்டு வருகின்றன. அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதிசெய்யப்பட்ட எண்ணிக்கை 27 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. உயிரிழப்பு 1663 ஆக உயர்ந்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

14 வயதில் நான் சந்தித்த இனவெறி: 'மாஸ்டர்' நாயகியின் அதிர்ச்சி பதிவு

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் இனவெறி காரணமாக கொலை செய்யப்பட்ட சம்பவதால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் அடுத்த தமிழ் திரைப்படம்

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்காமல் உள்ளன. மேலும் திரையரங்குகளை திறக்க திரையரங்கு உரிமையாளர்கள்

இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தையை தத்தெடுத்த பிரபல நடிகர்

சமீபத்தில் குஜராத்திலிருந்து பீகார் மாநிலம் முசாபூருக்கு தனது 2 வயது குழந்தையுடன் சென்ற பெண் ஒருவர், முசாபூர் ரயில் நிலையத்தை அடையும் முன்னரே உயிரிழந்தார்.

விஜய்-ஜிவி பிரகாஷ் கூட்டணி செய்த சாதனை: சமூக வலைத்தளங்களில் டிரெண்ட்!

தளபதி விஜய் நடித்த திரைப்படங்கள் பல சாதனைகள் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்

கொரோனா அவசரகால சிகிச்சைக்கு Remdesivir மருந்து!!! ஒப்புதல் வழங்கிய இந்தியா!!!

இதுவரை கொரோனா சிகிச்சைக்கு என்று முறைப்படுத்தப் பட்ட எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப் படாத நிலையில் Remdesivir