உண்மையான ஸ்போர்ட்ஸ்மேன்… முக்கிய வீரரைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் 15 ஆவது சீசன் தொடருக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் இடம்பெற்ற குயிண்டன் டி காக் நெகிழ்ச்சியான ஒரு செயலைச் செய்திருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் உண்மையான ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் என்று அவரைக் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
அதாவது பஞ்சாப் மற்றும் லக்னோவிற்கு எதிரான நேற்றைய ஐபிஎல் 42 ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து லக்னோ களமிறங்கி விளையாடியபோது 13 ஆவது ஓவரில் குயிண்டன் டி காக் பேட்டிங் ஸ்ட்ரைக்கில் இருந்தார். அவருக்கு பஞ்சாப் அணி வீரர் சந்தீப் சர்மா பந்து வீசினார். அந்தப் பந்து எட்ஜாகி விக்கெட் கீப்பர் கித்தேஷ் ஷர்மாவின் கைகளுக்குச் சென்றது. உடனே வீக்கெட் கீப்பர் உறுதியாக அவுட் என்று கையை உயர்த்தினார்.
ஆனால் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத நடுவர் நாட் அவுட் கொடுக்க, அங்குதான் சுவாரசியமான ஒரு நிகழ்வு அரங்கேறியது. தான் உண்மையிலேயே அவுட் என்பதை உணர்ந்த குயிண்டன் டி காக், திடீரென்று களத்தை விட்டு வெளியேறினார். நடுவர் நாட் அவுட் என்று கொடுத்தும்கூட வெளியேறிய அவரைப் பார்த்து லக்னோ அணி வீரர்களும் நடுவரும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர். இந்தக் காட்சிகள்தான் தற்போது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடிய லக்னோ 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
— James Tyler (@JamesTyler_99) April 29, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments