டி20 போட்டியில் டீ காக் செய்த செயல்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டியில் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் குயின்டன் டீ காக் போட்டிக்கு முன்பு இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டு சபதம் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் டீ காக் மீது நெட்டிசன்கள் கடும் விமர்சனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பை தொடர் போட்டிகள் கடந்த 17 ஆம் தேதிமுதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் போட்டிகள் அனைத்திலும் போட்டி தொடங்குவதற்கு முன்பாக அணிவீரர்கள் இனவெறிக்கு எதிரான சபதங்களை முழங்காலிட்டு எடுத்துக் கொள்கின்றனர். BlackLiveMatter எனும் பெயரில் கடைப்பிடிக்கப்படும் இந்தச் செயலுக்கு உலகம் முழுக்கவே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் இனவெறிக்கு எதிரான முழக்கமிடும் நிகழ்வில் அமைதி காத்துவந்தார். இதனால் இனவெறிக்கு எதிரான விழிப்புணர்வில் அவருக்கு உடன்பாடில்லை என்பது போலவே புரிந்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாடுகளை இவர் மீறிவிட்டதாகவும் அதனால் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரையில் முக்கிய வீரராகக் கருதப்படும் டீ காக் நேற்றைய போட்டியில் திடீரென பிளேயிங் 11-இல் இடம்பெறவில்லை. இதையடுத்து விக்கெட் கீப்பராக கிளாசன் கடைசி நேரத்தில் களம் இறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்த தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தனிப்பட்ட காரணங்களுக்காக டீ காக் இனவெறிக்கு எதிரான முழக்கத்தைச் செய்யவில்லை எனக் கூறியிருக்கிறது. ஆனால் தென்ஆப்பிரிக்க அணியில் தொடர்ந்து இனவெறி காட்டப்படுவதாக விமர்சனமும் வைக்கப்படுகிறது. கறுப்பினத்தவர்களுக்கு இந்த அணியில் அதிகம் முக்கியத்துவம் கொடக்கப்படுவதே இதற்கு காரணமாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com