சல்மான்கான் ஜாமீன் பெறுவதில் திடீர் சிக்கல்

  • IndiaGlitz, [Saturday,April 07 2018]

அபூர்வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் சல்மான்கானை ஜாமீனில் எடுக்க அவரது வழக்கறிஞர்கள் தீவிர முயற்சியில் உள்ளனர். சல்மான்கான் ஜெயிலில் இருப்பதால் பாலிவுட்டில் சுமார் ரூ.500 கோடி முடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் இன்று அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வந்தது.

சல்மான்கான் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மற்றும் அவரது ஜாமீன் மனுக்களை ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதி இன்று விசாரணை செய்யவுள்ளதாக அறிவித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி திடீரென 87 நீதிபதிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த 87 நீதிபதிகளில் ஒருவர்  ஜோத்பூர் நீதிமன்ற நீதிபதியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீதிபதி இல்லாததால் சல்மான்கானின் ஜாமீன் மனு இன்று விசாரணை செய்யப்பட வாய்ப்பில்லை என்றும், இந்த நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி நியமனம் செய்யப்பட்டவுடன் சல்மான்கானின் மனு விசாரணைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. எனவே இன்னும் ஒருசில நாட்கள் சல்மான்கான் சிறையில் தான் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.