பிறந்த குழந்தையைக் விமான நிலையத்தில் வீசிவிட்டு வேறு நாட்டுக்கு பறந்து சென்ற தாய்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கத்தார் விமான நிலையத்தில் பிறந்து சில கத்தார் விமான நிலையத்தில் பிறந்து சில தினங்களே ஆன பெண் குழந்தையைப் அதன் தாயே குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு வேறு நாட்டுக்கு பறந்து சென்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் விமான நிலைய அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட இருந்த அனைத்து விமானங்களையும் சிறிது நேரத்திற்கு ரத்து செய்து குற்றவாளியை தேடிய சம்பவம் சர்வதேச அளவில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2 ஆம் தேதி, கத்தாரின் ஹமர் சர்வதேச விமான நிலையத்தின் குப்பைத் தொட்டியில் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் பிறந்து சில தினங்களே ஆன குழந்தையை கண்டெடுத்து உள்ளனர். எப்படியும் அந்தக் குழந்தையின் தாய் இங்குதான் இருக்க வேண்டும் எனக் கருதிய அந்த விமான நிலையத்தின் அதிகாரிகள் அங்கிருந்த அனைத்துப் பெண்களையும் ஆடைகளை அப்புறப்படுத்தச் சொல்லி சோதனை செய்ததாகப் பரபரப்பு குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. மேலும் பெண்களை இப்படி வலுக்கட்டாயமாக சோதனை செய்வதற்கான காரணத்தையும் அவர்கள் கூறவில்லை என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகி இருக்கிறது.
அதோடு கத்தார் விமான நிலையத்தில் இருந்து சிட்னிக்கு புறப்பட இருந்த கத்தார் ஏர்வேஸை நிறுத்தி அந்த விமானத்தில் இருந்த பெண்களையும் அதிகாரிகள் சோதனை செய்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதையடுத்து இத்தகைய நடவடிக்கைகளுக்கு கத்தாரின் பிரதமர் மன்னிப்பும் கோரி இருக்கிறார்.
இந்நிலையில் பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு சென்ற தாய் யார் என்பதற்கான விவரம் தற்போது கிடைத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆசியா கண்டத்தைச் சேர்ந்த ஒரு நாட்டின் பெண்மணி கத்தாரில் ஒருவருடன் பழகியதால் இந்தக் குழந்தை பிறந்ததாகக் கூறப்படுகிறது. தனது சொந்த நாட்டிற்கு செல்ல நினைத்த அப்பெண்மணி குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்று இருக்கிறார். அதோடு குழந்தையை அவரது தந்தையிடம் ஒப்படைக்கும் படி ஒரு குறிப்பையும் விட்டு சென்றிருக்கிறார்.
இந்நிலையில் கத்தார் போலீஸ் குழந்தையை வீசிச் சென்ற அப்பெண்மணியை மீண்டும் கத்தாருக்கு அழைத்து விசாரணை செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக் கூறப்படுகிறது. கத்தார் நாட்டின் சட்டப்படி அந்தப் பெண்மணிக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என கருதப்படுகிறது. குழந்தையின் தந்தைக்கும் தண்டனை வழங்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments