நான் பாஜகவில் இணைந்ததிற்கு ரஜினி ஒரு முக்கிய காரணம்: பிரமிட் நடராஜன்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில மாதங்களாக பாஜகவில் சினிமா பிரபலங்கள் இணைவதும் அவர்களுக்கு பாஜகவில் பொறுப்புகள் அளிக்கப்பட்டு வருவதுமான செய்திகள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் சினிமா நட்சத்திரங்களான ராதாரவி, மதுவந்தி, கெளதமி, விஜயகுமார், குட்டி பத்மினி, நமீதா, ஜெயலட்சுமி, கஸ்தூரி ராஜா, கங்கை அமரன், காயத்ரி ரகுராம் ஆகியோர் பாஜகவில் பொறுப்புகளை பெற்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பாஜகவில் பிரபல குணச்சித்திர நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் இணைந்தார் என்ற செய்தியை பார்த்தோம்.
இந்த நிலையில் பாஜகவில் இணைந்தபின் பேட்டி அளித்த பிரமிட் நடராஜன் ரஜினியை பாஜகவில் இணைக்க முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘ரஜினிக்கு பாஜக மீதும், பிரதமர் மோடி மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. பாஜகவில் ரஜினி சார் பங்கேற்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு அவர் தலைமையேற்க வேண்டும் என்று ரொம்ப வருடங்களாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.
சோ உயிருடன் இருக்கும் போதே, இல.கணேசன் டெல்லியில் உத்தரவு வாங்கிவிட்டு, ரஜினியிடம் அவரை பேசச் சொல்வார். ரஜினி சாருக்கு பாஜக மீது ஒரு ஈடுபாடு. அதன் கொள்கையிலும் பிடிப்பு இருக்கிறது. எல்லாவற்றையும் மீறி அவருக்கு பிரதமர் மோடி மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
ரஜினி சார் எப்படியாவது பாஜகவுக்கு வந்துவிட்டால், தமிழ்நாட்டில் பன்மடங்கு பாஜக பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ரஜினி கட்சி ஆரம்பிக்காத பட்சத்தில், அவரை பாஜகவுடன் இணைக்க நிச்சயமாகப் பாடுபடுவேன். நான் பாஜகவில் இணைந்ததிற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம்"
இவ்வாறு பிரமிட் நடராஜன் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout