பாஜகவில் இணைந்தார் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்

கடந்த சில மாதங்களாக பாஜகவில் சினிமா பிரபலங்கள் இணைவதும் அவர்களுக்கு பாஜகவில் பொறுப்புகள் அளிக்கப்பட்டு வருவதுமான செய்திகள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது பாஜகவில் பிரபல குணச்சித்திர நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் இணைந்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் எல்.,முருகன் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்த பிரமிட் நடராஜன் இதுகுறித்து கூறியபோது, ‘பாஜகவில் இணைந்ததில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி கிடைத்துள்ளது. அதர்மம் எப்போதெல்லாம் தலை தூக்குகிறதோ அப்போது தர்மம் கடவுள் ரூபத்தில் தலைகாக்கும். அப்படி இப்போது கடவுள் மோடி ரூபத்தில் பூமிக்கு அதர்மத்தை அழிக்க வந்திருக்கிறது’ என்று தெரிவித்தார்.

பிரெண்ட்ஸ், சமுத்திரம், துள்ளுவதோ இளமை, வில்லன் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள பிரமிட் நடராஜன், ‘லவ் பேர்ட்ஸ்’, ‘எட்டுப்பட்டி ராசா’, ‘பிஸ்தா’, ‘பொன்மனம்’, ‘சங்கமம்’ உள்ளிட்ட ஒருசில படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

வனிதா விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சூர்யாதேவிக்கு ஜாமீன்: கஸ்தூரி தகவல்

வனிதா திருமண விவகாரத்தில் அவதூறாக பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டதாகவும் சூர்யா தேவி என்ற பெண் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்

யாருங்க நீங்க? யூடியூப் வனிதாவுக்கு அனுப்பிய மெயில்

வனிதா, சூர்யாதேவி விவகாரம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த வனிதா, யூடியூபே குழப்பி போய் நிக்குது என்றும், யாருங்க நீங்க

செல்போன் ஆப், விசாவை தொடர்ந்து இப்போ இதுவுமா… கெடுபிடி காட்டும் அமெரிக்கா!!!

அமெரிக்காவின் ஹீஸ்டன் மாகாணத்தில் இருக்கும் சீனத் தூதரகம் முன்பு நேற்று முன்தினம் இரவு சில முக்கிய ஆவணங்கள் எரிக்கப் பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன

என் வாழ்நாளில் இப்படி ஒரு பிறந்த நாளை கொண்டாடியதில்லை: யோகிபாபு

நகைச்சுவை நடிகர் யோகிபாபு நேற்று தனது வீட்டில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்; அதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

கிரிக்கெட் ஜாம்பவானுக்கே இந்த கதியா??? இன வேறுபாட்டுக்கு எதிராக விளாசும் டேரன் சமி!!!

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் இன வேறுபாட்டுக்கு எதிராகக் குரல் எழுப்பப்பட்டு வருகிறது.