கைமாறியது சத்யம் சினிமாஸ்: ரூ.850 கோடிக்கு வாங்கிய பிரபல நிறுவனம்

  • IndiaGlitz, [Monday,August 13 2018]

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த சத்யம் சினிமாஸ் தற்போது பிவிஆர் நிறுவனத்திற்கு கைமாறியுள்ளது.

தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் உள்ள சத்யம் சினிமாஸ் திரையரங்குகளின் 71.7% பங்குகளை ரூ.633 கோடிக்கும், பிவிஆர் நிறுவனத்தின் சில பங்குகளில் கொடுத்த வகையில் என மொத்தம் ரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாஸ் கைமாறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தமிழகம், தெலுங்கனா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மும்பையில் ஆகிய பகுதிகளில் சத்யம் சினிமாஸூக்கு 76 திரையரங்குகள் இருக்கின்றன. கடந்த 1974ஆம் ஆண்டு சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட சத்யம் சினிமாஸ் தற்போது 31 திரையரங்குகளுடன் உள்ளது.

இந்த நிலையில் சத்யம் சினிமாஸ் தற்போது பிவிஆர் நிறுவனத்திற்கு கைமாறியுள்ளது. சென்னையில் ஏற்கெனவே பிவிஆர் நிறுவனத்தின் ஸ்கைவாக் , கிராண்ட் மால் (வேளச்சேரி) , கிராண்டு கலாடா (பல்லாவரம் ) ஆகிய இடங்களில் திரையரங்குகள் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் இயக்குனரின் பிறந்த நாள் விழாவில் ரஜினி

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்து வருபவரும் பீட்டர் ஹெய்ன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2': சென்னை வசூல் எப்படி?

கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம் 2' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இருப்பினும் மதுரை உள்பட ஒருசில நகரங்களில் மட்டும் சில பிரச்சனைகளால் இந்த படம் இன்னும் வெளியாகவில்லை

'பியார் பிரேமா காதல்' படத்தின் அசத்தலான ஓப்பனிங்

யுவன்ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் பிக்பாஸ் பிரபலங்களான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா நடித்த 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது.

வீட்டிற்கு கூட செல்லாமல் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய விஜய்

இந்த நிலையில் தளபதி விஜய் அவர்கள் சர்க்கார் படப்பிடிப்பு முடித்துவிட்டு    அமெரிக்காவிலிருந்து 22  நேரம் பயணம்  செய்து இன்று அதிகாலை சென்னை வ்ந்தார்

தென்னிந்தியாவில் மழை நிலவரம்: வெதர்மேன் கூறும் தகவல்

தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்து வரும் நிலையில் கேரளா உள்ளிட்ட ஒருசில மாநிலங்கள் கனமழையால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.