கைமாறியது சத்யம் சினிமாஸ்: ரூ.850 கோடிக்கு வாங்கிய பிரபல நிறுவனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த சத்யம் சினிமாஸ் தற்போது பிவிஆர் நிறுவனத்திற்கு கைமாறியுள்ளது.
தமிழகம் உள்பட தென்னிந்தியாவில் உள்ள சத்யம் சினிமாஸ் திரையரங்குகளின் 71.7% பங்குகளை ரூ.633 கோடிக்கும், பிவிஆர் நிறுவனத்தின் சில பங்குகளில் கொடுத்த வகையில் என மொத்தம் ரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாஸ் கைமாறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தமிழகம், தெலுங்கனா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மும்பையில் ஆகிய பகுதிகளில் சத்யம் சினிமாஸூக்கு 76 திரையரங்குகள் இருக்கின்றன. கடந்த 1974ஆம் ஆண்டு சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட சத்யம் சினிமாஸ் தற்போது 31 திரையரங்குகளுடன் உள்ளது.
இந்த நிலையில் சத்யம் சினிமாஸ் தற்போது பிவிஆர் நிறுவனத்திற்கு கைமாறியுள்ளது. சென்னையில் ஏற்கெனவே பிவிஆர் நிறுவனத்தின் ஸ்கைவாக் , கிராண்ட் மால் (வேளச்சேரி) , கிராண்டு கலாடா (பல்லாவரம் ) ஆகிய இடங்களில் திரையரங்குகள் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout