துணை கலெக்டர் பதவியை ஏற்றார் பி.வி.சிந்து

  • IndiaGlitz, [Wednesday,August 09 2017]

கடந்த ஆண்டு நடைபெற்று ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளிப்பதக்கம் பெற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் பி.வி.சிந்து. அவருக்கு ஆந்திர மாநில அரசும், தெலுங்கானா மாநில அரசும் போட்டி போட்டு கொண்டு கோடிக்கணக்கில் பணம், வீடு உள்பட பல பரிசுகளை வழங்கியது.
இந்த நிலையில் ஆந்திர மாநில அரசு சமீபத்தில் பி.வி.சிந்துவுக்கு குரூப் 1 பணியின் மூலம் துணை கலெக்டர் பதவியை வழங்கியது. இதற்கான அரசாணையை சமீபத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பி.வி.சிந்துவிடம் வழங்கினார். இந்த பதவியை முப்பது நாட்களுக்குள் சிந்து ஏற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கபப்ட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று தனது பெற்றோர்களுடன் CCLA அலுவலகத்திற்கு வந்த சிந்து அதன் தலைமை கமிஷனர் அனில் சந்திரா புனிதா அவர்கள் முன் துணை கலெக்டர் பதவியை ஏற்றுக்கொண்டார். துணை கலெக்டர் பதவியேற்றாலும் பேட்மிண்டன் விளையாட்டில் தனது கவனம் முழு அளவில் இருக்கும் என்றும் தற்போது உலக போட்டிக்கு தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

More News

தமிழின் பெருமையை உலகுக்கு கொண்டு செல்ல ஜி.வி.பிரகாஷின் முதல் முயற்சி

உலகில் உள்ள 1772 மொழிகளில் 7 மொழிகள் மட்டுமே செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ளது. அந்த ஏழில் ஒன்று தமிழ் மொழி.

சமூக வலைத்தளங்களில் நமீதாவை வறுத்தெடுக்கும் ஓவியா ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களில் ஓவியா தவிர கிட்டத்தட்ட மீதி அனைவருக்குமே கெட்ட பெயர்தான் கிடைத்து வருகிறது.

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ஓவியா? பிக்பாஸ் கொடுத்த வெகுமதி

பத்து படங்களில் நடித்தாலும் பெற முடியாத புகழை ஒருசில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியா பெற்றார் என்பது தெரிந்ததே.

'விவேகம்', 'மெர்சல்', 'வேலைக்காரன்' சாட்டிலைட் உரிமை விபரங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் சாட்டிலைட் டிவிக்களின் நிர்வாகத்தினர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்துவேறுபாடுகள் இருந்த நிலையில் பெரிய ஸ்டார்கள் படங்களின் சாட்டிலைட் உரிமை கூட விற்பனை ஆகாமல் இருந்தது

ஓவியா எங்கே?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கான உள்ளங்களை கொள்ளை கொண்ட ஓவியா, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி பிக்பாஸ் வீட்டை விட்டே கடந்த வாஅரம் வெளியேறினார்