மதுர வீரன்' வீடியோ பாடலை வெளியிட்ட பிரபல வீராங்கனை

  • IndiaGlitz, [Wednesday,December 27 2017]

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்த 'மதுரவீரன்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

இந்த நிலையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையும் இந்தியாவிற்கு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வாங்கி கொடுத்து பெருமைப்படுத்தியவருமான பி.வி.சிந்து, 'மதுர வீரன்' படத்தின் வீடியோ பாடலை நேற்று வெளியிட்டார். 'உன் நெஞ்சுக்குள்ள' என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் பி.வி.சிந்து, விஜயகாந்தின் மூத்த மகனுக்கு சொந்தமான 'சென்னை ஸ்மாஷர்ஸ்' அணியில் விளையாடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சண்முகப்பாண்டியன், மீனாட்சி, சமுத்திரக்கனி, வேலராமமூர்த்தி, பாலசரவணன், ஜி.மாரிமுத்து, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இயக்குனர் பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவில், ப்ரவீண் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வி ஸ்டுடியோஸ் மற்றும் பிஜி மீடியா ஒர்க்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்ட இந்த படம் ஜல்லிக்கட்டு நடைபெறும் பொங்கல் திருநாளில் வெளியாவதால் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பெரியபாண்டியை சுட்டது முனிசேகர்தான்: தமிழக காவல்துறை விளக்கம்

சென்னையில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற காவல்துறையின் தனிப்படையில் இருந்த ஆய்வாளர் பெரியபாண்டியனை கொள்ளையர்கள் சுட்டுக்கொன்றதாக கூறப்பட்டது.

ஜெயலலிதாவை விட தினகரன் சிறந்த அரசியல்வாதியா? குஷ்பு

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெற்றுள்ளது பல அரசியல் கட்சிகளையும், அரசியல் தலைவர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவின் புத்தாண்டு சலுகை அறிவிப்பு

தொலைத்தொடர்பு துறையில் அறிமுகமான சில மாதங்களிலேயே புதிய புரட்சி செய்த ரிலையன்ஸ் ஜியோ, அவ்வப்போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது.

4 நாட்களில் ரூ.40 கோடி: வேலைக்காரனின் அபார வசூல்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' திரைப்படம் கடந்த 22ஆம் தேதி வெளியாகி ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. 

முதலமைச்சர் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தியின் சர்ச்சை விமர்சனம்: அதிமுகவினர் கொந்தளிப்பு

பிரபல எழுத்தாளர், நடிகர், அரசியல் விமர்சகர்  சோ அவர்களின் மறைவிற்கு பின்னர் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றி வரும் ஆடிட்டர் குருமூர்த்தி,