தமிழிசை செளந்தரராஜனுடன் ஒலிம்பிக் பதக்க மங்கை பிவி சிந்து சந்திப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏற்கனவே பதக்கம் வென்ற ஒரு சில வீரர்கள் வீராங்கனைகள் இந்தியா திரும்பி விட்ட நிலையில் இன்று மற்ற வீரர்களும் இந்தியா திரும்பி உள்ளனர். இந்தியா திரும்பிய வீரர்கள், வீராங்கனைகளுக்கு டெல்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒலிம்பிக் பேட்மிட்டன் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற பிவி சிந்து ஏற்கனவே பிரதமர் மோடி உள்பட பல தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில் தற்போது தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழிசை சௌந்தராஜன் அவர்களிடம் தான் பெற்ற வெண்கல பதக்கத்தை காண்பித்து பிவி சிந்து வாழ்த்து பெற்றார் என்பதும், அவருடன் அவருடைய பயிற்சியாளரும் தமிழிசை சௌந்தராஜன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்தினை பதிவு செய்துள்ளார்.
Felicitated @Pvsindhu1 at #Rajbhavan #Hyderabad #Telangana #Tokio2020@PMOIndia @narendramodi @rashtrapatibhvn @HMOIndia @ianuragthakur @Anurag_Office @IPRTelangana pic.twitter.com/LWvWgg2B1h
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 8, 2021
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று பாரத தாய்க்கு மகுடம் சூட்டிய சாதனை பெண்மணி @Pvsindhu1 அவர்கள் மாண்புமிகு தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை ராஜ்பவனில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார். pic.twitter.com/BrWY4I3Cc3
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 8, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments