10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு: அரசின் அதிரடி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நாளுக்கு நாள் ரஷ்யாவின் மக்கள் தொகை குறைந்து வருவதை அடுத்து 10 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு ரூ.13 லட்சம் பரிசு அளிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யாவின் மக்கள் தொகை கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உக்ரைன் போர் காரணமாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ரஷ்யாவில் அதிக அளவு குழந்தைகளை பெற்றெடுக்க்கும் தாய்மார்களுக்கு புதிய திட்டம் ஒன்றை ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின் அறிவித்துள்ளார்.
இதன்படி ஒரு பெண் 10 அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அந்த தாய்மாருக்கு 13 ஆயிரம் பவுண்டுகள் வெகுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் 13 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. 10வது குழந்தையை ஒரு பெண் பெற்றெடுக்கும்போது மீதமுள்ள 9 குழந்தைகளும் உயிருடன் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.
இரண்டாம் உலகப் போரின்போது ஏராளமான பொதுமக்கள், ராணுவத்தினர் இறந்த நிலையில் அப்போதைய ரஷ்ய தலைவர் ஜோசப் ஸ்டாலின் அவர்கள் இதுபோன்ற திட்டத்தை அறிவித்தார். அப்போது பல தாய்மார்கள் அதிக குழந்தையை பெற்றெடுத்து வெகுமதியை பெற்றனர். ஆனால் 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சின்னாபின்னமான போது இந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ரஷ்யாவின் மக்கள் தொகை குறைந்து வருவதை அடுத்து அதிபர் புதின் இந்த புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout