கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் போராட்டம். புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

  • IndiaGlitz, [Saturday,July 15 2017]

உலகநாயகன் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஏற்கனவே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவராகிய காயத்ரி ரகுராம் கூறிய ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தை மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. காயத்ரி ஒருவேளை கோபத்தில் இந்த வார்த்தையை உபயோகித்திருந்தாலும், அந்த தொலைக்காட்சி அந்த வார்த்தையை மியூட் செய்திருந்தால் இவ்வளவு பிரச்சனை சந்திக்க வேண்டிய இருந்திருக்காது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
இந்த நிலையில் காயத்ரி பயன்படுத்திய அந்த வார்த்தைக்காக கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். கமல் உடனடியாக மன்னிப்பு கேட்காவிட்டால் கடுமையான போராட்டங்களை தமது புதிய தமிழகம் கட்சி முன்னெட்டுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக தமிழக அரசே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காயத்ரி கூறிய அந்த வார்த்தை சமூகநீதிக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே கிருஷ்ணசாமிதான் கமல்ஹாசன் தன்னுடைய திரைப்படம் ஒன்றுக்கு 'சண்டியர்' என்ற டைட்டில் வைத்ததத்ற்காக போராட்டம் நடத்தினார். பின்னர் கமல் அந்த படத்தின் பெயரை 'விருமாண்டி' என்று மாற்றி கொண்டார். ஆனால் அதே 'சண்டியர்' பெயரில் இன்னொரு நடிகர் நடித்த படம் வெளியானபோது கிருஷ்ணசாமி எந்தவித போராட்டத்தையும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.