'புஷ்பா' படத்தின் 'ஊ சொல்றியா' பாடலை பாடிய பாடகிக்கு விபத்து: மருத்துவமனையில் அனுமதி..!

  • IndiaGlitz, [Tuesday,March 19 2024]

‘புஷ்பா’ படத்தின் ‘ஊ சொல்றியா’ பாடலை பாடிய பாடகி விபத்தில் சிக்கியதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல பாடல்கள் பாடியவர் பாடகி மங்க்லி. ஆந்திராவைச் சேர்ந்த இவர் அட்லியின் ’ஜவான்’ திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பில் ’வந்த இடம்’ என்ற பாடலை அனிருத்துடன் இணைந்து பாடி இருந்தார் என்பதும் விவேக் எழுதிய இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா’ என்ற பாடலை கன்னட பதிப்பில் பாடியுள்ளார்.

இந்த நிலையில் பாடகி மங்கி ஆன்மீக விழா ஒன்றில் பாடல் பாடிவிட்டு காரில் ஹைதராபாத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பின்னால் வந்த லாரி மோதியதால் அவரது கார் விபத்துக்கு உள்ளானது. இதில் பாடகி மங்க்லி மற்றும் அவருடன் வந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றனர். இருப்பினும் பெரிய அளவில் காயம் இல்லை என்பதால் உடனே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.