முதல் பாகம் ரிலீசுக்கு முன்பே 2வது பாகத்தின் படப்பிடிப்பு: 'புஷ்பா' உரிமைக்கு போட்டி!

  • IndiaGlitz, [Monday,August 16 2021]

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’ரங்குஸ்தலம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. ராம்சரண் தேஜா, சமந்தா நடித்த இந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்து தற்போது மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் ‘புஷ்பா’. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ரூபாய் 250 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை வாங்க பல விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ‘புஷ்பா’ திரைப்படம் ரிலீஸுக்கு முன்னரே அதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், வெண்ணிலா கிஷோர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.