'புஷ்பா' ரிலீசில் ஏற்பட்ட திடீர் சிக்கல்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாக திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான ’புஷ்பா’ திரைப்படம் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் தெலுங்கு சென்சார் சான்றிதழ் மட்டுமே தற்போது கிடைத்துள்ளது என்றும், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளின் சென்சார் தாமதமாகி வருவதால் இந்த படம் மேற்கண்ட நான்கு மொழிகளிலும் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் படக்குழுவினர் சென்சார் அதிகாரிகளிடம் தமிழ் மற்றும் ஹிந்தி பதிப்புகளின் சென்சார் சான்றிதழ் வாங்குவதற்கு தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் திட்டமிட்டபடி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 17ஆம் தேதி இந்தப் படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

250 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ’புஷ்பா’ திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தமிழகத்தில் மட்டும் 400 திரையரங்குகளில் திரையிட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.