'புஷ்பா' உங்க படத்தோட பட்டி டிங்கரிங் தான்.. ரசிகரின் கருத்தை பதிவு செய்த பிரபல நடிகர்..!

  • IndiaGlitz, [Monday,May 01 2023]

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன 'புஷ்பா’ திரைப்படம் உங்க படத்தின் பட்டி டிங்கரிங் போட்ட படம் தான் என ரசிகர் ஒருவர் பதிவு செய்ததை பிரபல நடிகர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் தற்போது உருவாகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் நடிகரும் பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னருமான ஆரியின் ரசிகர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததை ஆரி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அந்த ரசிகர் ’திறமையான நடிகர்கள் எல்லாம் அதிக திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்கிறார்கள். நீங்கள் சீக்கிரம் ஒரு திரைப்படத்தில் நடியுங்கள். நீங்கள் நடித்த ’நெடுஞ்சாலை’ திரைப்படத்தை தான் பட்டி டிங்கரிங் பார்த்து 'புஷ்பா’ என ஒரு தெலுங்கு படத்தை எடுத்தார்கள். நீங்கள் புஷ்பாவை விட ஒரு நல்ல படத்தில் விரைவில் நடியுங்கள் என்று கூறியுள்ளார்

இந்த பதிவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடிகர் ஆரி அதன் பின் கூறி இருப்பதாவது: திறமையுள்ளவர்கள் வாய்ப்பைத் தேடி அலையும் காலம் இது.. திறமையுள்ளவர்களைத் தேடி வாய்ப்பு வரும் காலம் விரைவில்!!! என்று கூறியுள்ளார்.