'புஷ்பா' பாடலின் ஆங்கில வெர்ஷனை பாடிய உலகப்புகழ் பெற்ற பாடகி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான ’புஷ்பா’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி கன்னடம் என அனைத்து மொழிகளிலும் இந்த படம் வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு ரசிகர்களையும் கவனத்தை பெற்றது என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களில் ஒன்றான ஸ்ரீ வள்ளி என்ற பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஆங்கிலத்தில் உலகப்புகழ் பெற்ற பாடகி எம்மா ஹீஸ்டர்ஸ் அவர்கள் பாடியுள்ளார்.
இந்த பாடலின் வீடியோவை ’புஷ்பா’ படத்தின் இசையமைப்பாளர் தேவி பிரசாத் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் இந்த வீடியோவுக்கு ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பாடல் ஒன்றை உலகப்புகழ் பாடகி பாடியதால் அந்த பாடல் சர்வதேச பார்வைகளின் கவனத்தை கவர்ந்தது பெருமைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது.
Loved this??❤️??
— DEVI SRI PRASAD (@ThisIsDSP) February 5, 2022
Hey @sidsriram bro,I told U when we recorded,lets do an English version 4 Fun,but here’s a lovely cover by @emmaheesters ??????
May be we shud do our version too?? @alluarjun @aryasukku @javedali4u @boselyricist @adityamusic @TSeries https://t.co/9K3qAD4o1H
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments