6 மொழிகளில் வெளியான 'புஷ்பா 2' பாடல்.. 6 மொழிகளுக்கும் ஒரே பாடகி..!

  • IndiaGlitz, [Wednesday,May 29 2024]

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ படத்தின் பாடல் சற்றுமுன் ஆறு மொழிகளில் வெளியாகி உள்ள நிலையில் இந்த ஆறு மொழிகளில் உள்ள பாடலை ஒரே பாடகி பாடி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தில் இடம்பெற்ற ’புஷ்பா புஷ்பா’ என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகின நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் இன்னொரு பாடல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காளம் என ஆறு மொழிகளில் இந்த பாடல் வெளியாகி உள்ள நிலையில் ஆறு மொழிகளிலும் பாடகி ஸ்ரேயா கோஷல் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெலடி பாடலாக அமைந்துள்ள இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைத்தளத்தில் இந்த பாடலை வெளியிட்டுள்ளார். இந்த பாடலுக்கு பார்வையாளர்கள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் ‘புஷ்பா 2’ படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பதும் தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இன்று சூர்யா ரசிகர்கள் தயாராக இருங்க.. மாலையில் ஒரு செம்ம அப்டேட்..!

நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு செம அப்டேட் வெளியாக இருப்பதை அடுத்து அவர்களுக்கு இன்று கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

'அண்ணா நோ கமெண்ட்ஸ்'..  பத்திரிகையாளர் கேள்விக்கு ரஜினிகாந்த் கூறிய பதில்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ஆன்மீக பயணம் மேற்கொள்வதை அடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அரசியல் குறித்த கேள்விக்கு 'அண்ணா நோ கமெண்ட்ஸ்' என்று பதில் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி

இலங்கையில் நடைபெற்ற விளையாட்டு போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து..!

இலங்கை, கொழும்புவில் இம்மாதம் அதாவது மே 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற்ற 10 வது Annual Master Athletic Championship - SriLanka 2024 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு

'தக்லைஃப்' படத்தில் மாஸ் குத்துப்பாட்டா? யார் யார் ஆடுகிறார்கள்?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது சென்னையில் இந்த படத்தின்

'சாமானியன்' ரிலீசுக்கு பின்னர் ரூட்டை மாற்றிய ராமராஜன்.. பெரிய நடிகர்கள் சம்மதிப்பார்களா?

நீண்ட இடைவெளிக்கு பிறகு ராமராஜன் நடித்த 'சாமானியன்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்று கூறப்படுகிறது.